பரம்பிக்குளம் காட்டுபகுதி ஒரு புலிகள் காப்பு வனகம் ஆகும். (Tiger Reserve
Forest)மொத்தமாக 36 புலிகள் உள்ளதாக கணக்கிட்டு உள்ளார்கள்.ரிசர்வ் காட்டு
பகுதி என்பதால் எளிதில் அனுமதி கிடையாது. தமிழ்நாடு மற்றும் கேரள
வனத்துறைகள் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.அதில் கேரள வனப்பகுதியில்
சுற்றுலாவிற்கும் வசதி செய்து உள்ளார்கள்.parambikulam.org
என்ற கேரள வனத்துறை இணையதளம் வழியாக காட்டிற்கு நடுவே தங்கும் விடுதிகளை
புக் செய்து கொள்ளலாம்.அங்கு வசிக்கும் பழங்குடி மக்களால் சமையல்
செய்யப்பட்டு மூன்று வேளை சாப்பாடும்
இதில் அடங்கும்.12 மணிக்கு check-in செய்ய வேண்டும். அதன் பிறகு மதிய
சாப்பாடு கொடுத்த பிறகு காட்டிற்குள் சபாரி வேனில் அழைத்து
செல்கிறார்கள்.அதிக அளவில் மான்கள், காட்டு எருமைகள், குரங்குகள், யானைகள்
போன்றவற்றை இயற்கை சூழ்நிலையிலே காணலாம்.ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பின்
மூங்கில் கம்புகளால் செய்யப்பட்ட படகு சவாரிக்கு அழைத்து
செல்கிறார்கள்.தேநீரை முடித்த பிறகு பழங்குடி மக்களின் நடனக்காட்சி அரை மணி
நேரத்திற்கு காண்பிக்கப்படுகிறது.அதன் பிறகு Night Safariக்கு அழைத்து
செல்கிறார்கள்.நைட் சபாரியில் நமக்கு யோகம் இருந்தால் புலிகளை காண
முடியும்.இரவு எட்டரை மணிக்கு டின்னர் முடித்து அறையில் கொண்டு வந்து
விட்டு விடுகிறார்கள். காட்டின் நடுவே, பக்கத்தில் யாரும் தங்காமல், எலிகள்
மற்றும் பறவைகளின் ஓசையில் ஒரு திரில்லான இரவு தங்கல் அனுபவம்
தான்.மீண்டும் காலை எழுந்து, ஒரு ட்ரெக்கிங் அழைத்து செல்கிறார்கள்.
சாப்பாடு முடிந்து 10.30 மணிக்கு Check-out செய்ய வேண்டும்.ஆனால் இந்த
இயற்கையான அனுபவத்தை விட்டு எளிதில் வர மனதில்லை.நகர மயமாக்கல் டென்சன்
நிலையில் இருப்போர், வேறு கவலைகளில் இருப்போர், ஹனிமூன் திட்டம்
போன்றவற்றிற்கு பரம்பிக்குளம் ஒரு அருமையான அனுபவம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக