செவ்வாய், 10 செப்டம்பர், 2019

பரம்பிக்குளம்

பரம்பிக்குளம் காட்டுபகுதி ஒரு புலிகள் காப்பு வனகம் ஆகும். (Tiger Reserve Forest)மொத்தமாக 36 புலிகள் உள்ளதாக கணக்கிட்டு உள்ளார்கள்.ரிசர்வ் காட்டு பகுதி என்பதால் எளிதில் அனுமதி கிடையாது. தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறைகள் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.அதில் கேரள வனப்பகுதியில் சுற்றுலாவிற்கும் வசதி செய்து உள்ளார்கள்.parambikulam.org என்ற கேரள வனத்துறை இணையதளம் வழியாக காட்டிற்கு நடுவே தங்கும் விடுதிகளை புக் செய்து கொள்ளலாம்.அங்கு வசிக்கும் பழங்குடி மக்களால் சமையல் செய்யப்பட்டு மூன்று வேளை சாப்பாடும் இதில் அடங்கும்.12 மணிக்கு check-in செய்ய வேண்டும். அதன் பிறகு மதிய சாப்பாடு கொடுத்த பிறகு காட்டிற்குள் சபாரி வேனில் அழைத்து செல்கிறார்கள்.அதிக அளவில் மான்கள், காட்டு எருமைகள், குரங்குகள், யானைகள் போன்றவற்றை இயற்கை சூழ்நிலையிலே காணலாம்.ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பின் மூங்கில் கம்புகளால் செய்யப்பட்ட படகு சவாரிக்கு அழைத்து செல்கிறார்கள்.தேநீரை முடித்த பிறகு பழங்குடி மக்களின் நடனக்காட்சி அரை மணி நேரத்திற்கு காண்பிக்கப்படுகிறது.அதன் பிறகு Night Safariக்கு அழைத்து செல்கிறார்கள்.நைட் சபாரியில் நமக்கு யோகம் இருந்தால் புலிகளை காண முடியும்.இரவு எட்டரை மணிக்கு டின்னர் முடித்து அறையில் கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள். காட்டின் நடுவே, பக்கத்தில் யாரும் தங்காமல், எலிகள் மற்றும் பறவைகளின் ஓசையில் ஒரு திரில்லான இரவு தங்கல் அனுபவம் தான்.மீண்டும் காலை எழுந்து, ஒரு ட்ரெக்கிங் அழைத்து செல்கிறார்கள். சாப்பாடு முடிந்து 10.30 மணிக்கு Check-out செய்ய வேண்டும்.ஆனால் இந்த இயற்கையான அனுபவத்தை விட்டு எளிதில் வர மனதில்லை.நகர மயமாக்கல் டென்சன் நிலையில் இருப்போர், வேறு கவலைகளில் இருப்போர், ஹனிமூன் திட்டம் போன்றவற்றிற்கு பரம்பிக்குளம் ஒரு அருமையான அனுபவம்.




























குண்டாறு

பெயர் தான் குண்டாறு மிகச்சிறிய அணை இது 36அடி கொள்ளளவு உள்ள அணை இது தென்காசிக்கு மிக அருகில் உள்ளதுமிகசிறந்த சுற்றுலா தளம் இது நெல்லைவாசிகளுக்கு கூட சிலருக்கும் இதை பற்றி தெரியாமல் இருக்கலாம் மிகரம்மியமான சூழல் சுற்றிலும் நகரத்து வாழ்க்கையை அறிந்திடாத கிராமம்.கூட்டம் என்றால் அலர்ஜி என்று நினைப்பவர்களுக்கு, குற்றாலத்தை விட்டால் இன்னொரு ஆப்ஷன் இருக்கிறது.அது, குண்டாறு. குண்டாறு என்பது நீர்த் தேக்கம். பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் இல்லை என்பதால், நிறையப் பேருக்கு குண்டாறு பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதனால், இங்கே கூட்டமும் அவ்வளவாகக் கும்மியடிக்க வாய்ப்பில்லை.அமைதி,தனிமை விரும்பிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். தென்காசியிலிருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கும் குண்டாறுக்கு நிறையப் பேருக்கு வழியே தெரியவில்லை.குண்டாறு அருவிக்கு மேல போகணும் சார்... ஒரு ட்ரிப்புக்கு 1200 ரூபாய் சார்... இருந்து கூட்டிட்டு வந்துடுவோம் என்றார்.இங்கேயும் எத்தனை பேர் என்றாலும் அதே கட்டணம் தான். இப்போது சீஸன் டைம் என்பதால், பேரம் பேச யாருமே முன் வரவில்லை. குண்டாற்றின் ஸ்பெஷல் என்னவென்றால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஜீப் சவாரி செய்து அருவியை அடையலாம். ‘நைட் 2 மணிக்கு கூப்பிட்டாக்கூட நாங்க ரெடியா இருப்போம் என்றார் ஜீப் டிரைவர். (ஜீப் சவாரிக்கு: 07639065883, 08122102300).நாலரை கி.மீ கடுமையான காட்டுப் பாதை வழியாகத் தான் ஜீப் போனது. திடும்மென பாறைகள்... சலசலக்கும் ஓடைகள்... காலைப் புதைக்கும் மணல் திட்டுகள் வழியாக ஜீப் சவாரி செம த்ரில்லிங்.ஜீப்பைத் தவிர இங்கே வேறு வாகனங்களை நினைத்தே பார்க்க முடியாது. 1.3 கி.மீ தாண்டி வருவது நெய்யருவி. ‘ஜீப் கட்டணம் அதிகமா இருக்கே என்று ஃபீல் செய்பவர்கள், 1. கி.மீ தூரம் நடந்து வந்து நெய்யருவிக்கு வரலாம்.நெய்யருவிக்கு இன்னொரு பெயர் பப்ளிக் ஃபால்ஸ். அதாவது, பொது மக்கள் யார் வேண்டுமானாலும் நெய்யருவிக்கு நடந்து வந்து குளிக்கலாம்.
தனிக் குடித்தனம் புகுந்த கப்புள்ஸ் மாதிரி, கூட்டம் ரொம்ப சிக்கென இருந்தது. ஆள் அரவம் அவ்வளவாக இல்லை. அருவித் தண்ணீர் செம ஜில்..நடுநடுவே குட்டிக் குட்டியாய் அருவிகள். எங்கு வேண்டுமானாலும் ஜீப்பை நிறுத்தி குளிக்கலாம். மேலே போகப் போக, குண்டாறு அருவி வந்தது. பெரிதாகக் கூட்டம் இல்லை. அருவி அமைந்திருந்த இடமே அதகளமாய் இருந்தது.குற்றாலத்துக்குக் கிளம்புபவர்கள், அப்படியே குண்டாறு பக்கமும் வண்டியைத் திருப்பினால், ஓர் அற்புதமான அனுபவம் கிடைக்க வாய்ப்புண்டு.













ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

மறக்கமுடியாத அனுபவம்

மறக்கமுடியாத அனுபவம் நண்பர்களுடன் தொலைந்த பந்தை தேடிய போது கொடுத்த அழகான சந்தோசமான நாட்கள் மறக்கமுடியாதவை... அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அந்த அழகான நினைவுகள் ...

கானல் நீர்

நமக்கு வரக்கூடிய பிரச்சனை என்பது கானல் நீர் மாதிரி தெரிந்தாலும் பயப்படாம கிட்டப் போனா ஒன்னுமே இருக்காது. நமது வாழ்க்கையிலும் இத்தகைய பயத்தை நாம் துணிவுடன் எதிர் கொண்டு ஒரு சிலவற்றில் வெற்றியடைந்தும் இருப்போம். அந்த வெற்றிக்குப் பின்பு இதுக்காட இப்படிப் பயந்து நடுங்கினோம் என நமக்குத் தோன்றி இருக்கும். இல்லையா நண்பர்களே?

டைனமோ லைட்

நம்மளுடைய சிறு வயதில் அப்பாவின் சைக்கிளிலும் நம்முடைய சைக்கிளிலும் இத்தகைய டைனமோ லைட் பொருத்தி சைக்கிள் ஓட்டிய காலங்களை எண்ணிப் பார்க்கையில் இன்று நாம் வித விதமான பைக்குகளிலும், கார்களிலும் நாம் ஒட்டிச் சென்றாலும், அன்று நமக்குக் கிடைத்த மகிழ்சி இன்று இருக்குமா என்பது சந்தேகம் தான்.


மயில் இறகு

நம்மளுடைய சிறு வயதில் இந்த மயில் இறகை புத்தகத்திலும், டைரிக்குள்ளும் வைத்து அதற்கு அரிசியையும், பென்சிலையும் சீவி சாப்பாடு வைத்து குட்டி போடும் என்று தினம் தினம் திறந்து பார்த்து ... ஏமாற்றம் அடைந்து என் அப்பாவிடம் கேட்டது நண்பனுக்கு மட்டும் மூன்று நாளிலே மயில் இறகு குட்டி போட்டுருச்சுப்பா எனக்கு ஏன் மயில் இறகு குட்டி போடலனு ... அந்த டெக்னிக்க .. அதான் அதன் மேல் பகுதியில் சிறிது கிள்ளி அருகில் வைக்கச் சொல்லித் தந்தார். அதை இப்ப நினைச்ச சிரிப்புதான் வருது.

மார்கழி மாதம்

மார்கழி மாதம் வந்தாலே போதும் அதிகாலை 5மணிக்கு எல்லாம் எல்லாருடைய வீட்டுவாசலில் கடும் குளிரிலும் பெண்கள் கோலம் போடுவாங்க...நாங்க எல்லாரும் சின்ன பசங்க தீமுட்டி ரோட்டுல குளிரு காய்ந்துகொண்டு இருப்போம்.இப்பலாம் அது போன்ற மார்கழி மாத கிராமத்து தெருக்களை பார்க்கவே முடிவதில்லை...

சனி, 2 பிப்ரவரி, 2019

மழை பெய்தால் போதும்

எங்கள் ஊர் வானம் பார்த்த பூமி. ஆதனால ஊரில் இருந்தவரை மழை பெய்தால் போதும் தண்ணீரை அண்டாவிலும், குடத்திலும், தொட்டியிலும் சும்மா பிடித்துப் பிடித்து ஊற்றி அது தான் குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு என்று பயன்படுத்துவோம். ஆனால் இன்று பிழைப்பைத் தேடி சென்னை வந்த நாம் இப்படி ஓடி ஓடி மழை நீரை சேகரிக்கிறோமா என்றால்? இல்லை என்பது தான் Uதில். பொதுவாக நாம் அனைவரும் மழை நீரை சாலைகளில் விட்டு கடைசியில் கடலில் தான் கலக்கிறது. மழை பெய்யும் நாட்களில் கூட லாரிகளில் தான் நாம் நீரை விலைக்கு வாங்கி தொட்டியில் விடுகிறோம். அன்று தண்ணியின் அருமையை உணர்ந்து மழைநீரைப் பிடித்தது போல் இன்று நாம் ஏன் மழை நீரை தொட்டியில் சேமிக்கக் கூடாது?. இதோ இந்தப் படத்தைப் பார்த்து முடிந்தளவு முயற்சி செய்யுங்கள் நண்பர்களே.

இப்ப எல்லாம் நமக்கு போன் வந்தாலும் சரி, நாம நண்பர்களுக்கு போன் பண்ணுனாலும் சரி எடுத்த உடனே ஏதாவது முக்கியமா?

இப்ப எல்லாம் நமக்கு போன் வந்தாலும் சரி, நாம நண்பர்களுக்கு போன் பண்ணுனாலும் சரி எடுத்த உடனே ஏதாவது முக்கியமா? அப்பறம் கூப்பிடட்டானு தான் சொல்லுறோம். இன்னும் சிலர் அழைப்பை எடுப்பதில்லை, இன்னும் சிலர் அழைப்பைக் கட் பண்ணிட்டு குறுஞ்செய்தில முக்கியமாடா? னு கேட்கிறோம். எதும் இல்லை ... பேசி ரொம்ப நாளாச்சேனு கூப்பிட்டேன் என்று பதில் அனுப்பினாலும் ஓ .. இன்னோரு நாள் பேசலாம் என்று குறுஞ்செய்தியை நிருத்திடுறோம். சரி வேலை நாள்ல தான் பிசியாக இருக்கானே என்று ஞாயிற்று கிழமை போன் பண்ணாலும் அழைப்பை எடுக்குறது இல்லை, திருப்பி கால் பண்ணி என்ன என்று கேட்பதும் இல்லை. எல்லோரும் இப்ப பிசியாகத்தான் வாழ்க்கையில் ஓடிக்கிட்டு இருக்கோம். அதுக்காக முக்கியமா இருந்தா மட்டும் தான் பேசணும்னா நாளடைவில் பேச்சு குறைந்து போச்சு, தொடர்பு இல்லாமல் நமக்குள் இருக்கும் அன்பு, பாசம், நெசம் எல்லாம் குறைந்து விட்டது. அது என்ன ? சும்மா பேசினா? அது சாதரணமா? உங்களுக்கு போன் பண்ணினால் அந்த நபர் சும்மா இருக்கார் என்று அர்தம் இல்லை. சொல்லப் போனால் யாருக்கும் இப்ப எல்லாம் நேரம் இல்லை தான். குழந்தைகள், வேலைப்பளு சம்பந்தமான மன அழுத்தம், எரிச்சல், தூக்கமின்மை, பிற பிரச்சனைகள் என்று பேசாமல் இருக்க பல காரணம் இருக்கின்றது. அதுக்காக பேசாமல் இருக்கக் கூடாது. அழைப்பை எடுக்க முடியாவிட்டாலும் பரவா இல்லை அதை பார்த்து விட்டு நேரம் கிடைக்கும் போது மறக்காமல் அழைத்து போன் பேசலாம்.முக்கியமா தகவலுடன் வரும் அழைப்பை விட எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சிரித்து பேசும் அந்த அழைப்பு தான் பெருசு. அதுனால இது மாதிரி வரும் சும்மா அழைப்பை தவற விடாதீர்கள்.

ஒரு ரூபாய் காயின் போனே மறக்க முடியுமா என்ன?

இந்த ஒரு ரூபாய் காயின் போனே மறக்க முடியுமா என்ன? கல்லூரி முடித்து வேலை தேடி சென்னை வந்த போது என்னிடம் போன் கிடையாது என் வீட்டிலும் போன் கிடையாது. என்னுடன் தங்கியிருந்த நண்பர்களின் போனுக்குத் தான் என் குடும்பத்தினர் இந்த ஒரு ரூபாய் காயின் போன் மூலம் தொடர்பு கொள்ளுவார்கள். இரண்டு ரூபாயில் அத்துணை குடும்ப உறுப்பினரிடம் பேசி அங்கு நடப்பதையும் இங்கு நான் என்ன செய்கின்றேன் என்ற தகவலையும் பறிமாறிய நாட்கள் ஒவ்வொருவரின் மனக் கண்ணை விட்டு அகழாது. நேரம் மற்றும் பணத்தின் அருமையை உணர்த்திய இந்த போனை மறக்க முடியுமா என்ன?