இப்ப எல்லாம் நமக்கு போன் வந்தாலும் சரி, நாம நண்பர்களுக்கு போன் பண்ணுனாலும் சரி எடுத்த உடனே ஏதாவது முக்கியமா? அப்பறம் கூப்பிடட்டானு தான் சொல்லுறோம். இன்னும் சிலர் அழைப்பை எடுப்பதில்லை, இன்னும் சிலர் அழைப்பைக் கட் பண்ணிட்டு குறுஞ்செய்தில முக்கியமாடா? னு கேட்கிறோம். எதும் இல்லை ... பேசி ரொம்ப நாளாச்சேனு கூப்பிட்டேன் என்று பதில் அனுப்பினாலும் ஓ .. இன்னோரு நாள் பேசலாம் என்று குறுஞ்செய்தியை நிருத்திடுறோம். சரி வேலை நாள்ல தான் பிசியாக இருக்கானே என்று ஞாயிற்று கிழமை போன் பண்ணாலும் அழைப்பை எடுக்குறது இல்லை, திருப்பி கால் பண்ணி என்ன என்று கேட்பதும் இல்லை. எல்லோரும் இப்ப பிசியாகத்தான் வாழ்க்கையில் ஓடிக்கிட்டு இருக்கோம். அதுக்காக முக்கியமா இருந்தா மட்டும் தான் பேசணும்னா நாளடைவில் பேச்சு குறைந்து போச்சு, தொடர்பு இல்லாமல் நமக்குள் இருக்கும் அன்பு, பாசம், நெசம் எல்லாம் குறைந்து விட்டது. அது என்ன ? சும்மா பேசினா? அது சாதரணமா? உங்களுக்கு போன் பண்ணினால் அந்த நபர் சும்மா இருக்கார் என்று அர்தம் இல்லை. சொல்லப் போனால் யாருக்கும் இப்ப எல்லாம் நேரம் இல்லை தான். குழந்தைகள், வேலைப்பளு சம்பந்தமான மன அழுத்தம், எரிச்சல், தூக்கமின்மை, பிற பிரச்சனைகள் என்று பேசாமல் இருக்க பல காரணம் இருக்கின்றது. அதுக்காக பேசாமல் இருக்கக் கூடாது. அழைப்பை எடுக்க முடியாவிட்டாலும் பரவா இல்லை அதை பார்த்து விட்டு நேரம் கிடைக்கும் போது மறக்காமல் அழைத்து போன் பேசலாம்.முக்கியமா தகவலுடன் வரும் அழைப்பை விட எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சிரித்து பேசும் அந்த அழைப்பு தான் பெருசு. அதுனால இது மாதிரி வரும் சும்மா அழைப்பை தவற விடாதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக