நம்முடைய சிறு வயதில் இந்த மஞ்சப்பையில் தான் நம்முடைய புத்தகத்தை வைத்து பள்ளிக்கு எடுத்துச் செல்வோம். அது போக கொஞ்சமா காய்கறிகள் வாங்கனும்னாலும் இந்தப் பைதான். காலையில் எழுந்த உடன் வடை, கேசரி, சிந்தாமணி வாங்கச் சென்றாலும் இந்தப்பைதான் கொண்டு செல்வோம். சாம்பாருக்கு தூக்குச் சட்டி தான் பயன்படுத்தினோம்.நாம் பயன்படுத்திய துணிப்பை மண்ணில் எளிதில் மக்கக் கூடியது. சும்மா துவைத்து துவைத்து பல முறை பயன்படுத்தி இருக்கோம். அதே மாதிரி பள்ளிக்கு வாட்டர் பாட்டில் எடுத்துட்டு போனதே இல்லை. பள்ளியில் இருக்கும் தண்ணீர் தான் நம்முடைய தாகத்தை போக்கும். இப்படி வாழ்க்கையில் இருந்த நாம் எவ்வாறு பாலிதீன் பையை உபயோகப் படுத்த ஆரம்பித்தோம் என்று யோசிக்கும் போது என் நினைவுக்கு எட்டியது ஒரு 2004ல் இருந்து இருக்கும்.அது ஈரம் படாது, எடை மற்றும் விலை குறைவு என்று அறிமுகப்படுத்தி, நாம் பயன்படுத்திய துணிப்பையை அழித்தேவிட்டார்கள். இதை விட இப்படிச் சொல்லலாம் நாம் அழித்து விட்டோம் என்பது தான் சரியானது. துணிப்பையை வெளியில தூக்கிப் போட்டால் அது மண்ணுக்கு உரமாகும், பிளாஸ்டிக் பையை வெளியில் தூக்கி ஏறிந்தால் அது நஞ்சாகும் என்பது எல்லோருக்கும் தெரியும் இருந்தும் நாம்மால் முழுவதுமாக மாற முடியவில்லை. வடிவேலு ஒரு படத்தில் குடியை நிருத்த முடியாமல் ஒவ்வொருவரும் ஞாபகப்படுத்துவது போல் இன்று நாம் பாலீத்தின்பை உபயோகப்படுத்துவதை நிருத்த நினைத்தாலும் சுற்றி முற்றி எங்கு சென்றாலும் பாலீத்தின்ல தான் தாராங்க. நம் கண்முன்னை நடக்கும் இத்தகைய கேடுகளை நிருத்தாவிட்டால் பிறகு நம்சந்ததி வருத்தப்படும் போது எதுவும் திரும்பக் கிடைக்காது. ஆகையால் படிப்படியாக பாலீத்தின் பைகளை உபயோகப்படுத்துவதே குறைக்க முயற்சிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக