சனி, 2 பிப்ரவரி, 2019

சிறு வயதில் ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தினத்தன்று

நம்முடைய சிறு வயதில் ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தினத்தன்று இங்க் பேனாக்களில் இங்கை நிரப்பிக் கொண்டு பள்ளியில் படிக்கும் ஒரு நண்பரையும் விடாமல் அனைவரின் சட்டையிலும் அடித்து சந்தோசமாக மகிழ்ந்த அந்த நாட்கள் அற்புதம். அதையும் தாண்டி நண்பர்கள் எல்லாம் அன்று நம்மை ஏமாற்ற பொய்கள் பல சொன்னாலும் நம்பாமல் விழிப்புடன் இருந்து நாம் ஏமாற இடம் கொடுக்காமல் இருந்த அந்த நாள் அற்புதம். அதே விழிப்புணர்வு எல்லா நாளும் நமக்கு இருந்தால் நம்மை யாரும் ஏமாற்ற முடியாது. இப்பொழுதெல்லாம் சிறுவர்கள் முட்டாள்கள் தினம் கொண்டாடுகிறார்களா என்பது கூட தெரியவில்லை?. பொய்யும் , பித்தலாட்டம் நிறைந்த இன்றய வாழ்கை நிகழ்வுகளை நாம் பார்க்கும் போதுஇனி தனியா முட்டாள் தினம் தேவையா? அது தான் நாளும் ஏமாற்றப் படுகிறோமே? அரசியல்வாதி, கார்பெரெட் கம்பெனி, அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு முதலிடு செய்யும் சிட் பண்ட், அப்புருவல் வாங்காத தனியார் நிதி நிறுவனம் ரூபத்தில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக