சனி, 2 பிப்ரவரி, 2019

நம் காலத்தில் நாம் விளையாடி களைத்து வீட்டுக்கு சாப்பிடும் நேரத்திற்குத் தான் வருவோம்

எங்கள் வீட்டிற்கு மிக அருகில் இருக்கக் கூடிய பூங்காவுக்கு எனது குழந்தைகளை அழைத்துச் சென்ற தருணம். நம் காலத்தில் நாம் விளையாடி களைத்து வீட்டுக்கு சாப்பிடும் நேரத்திற்குத் தான் வருவோம். அதுவும் எவ்வாறு வருவோம் என்றால் வேர்த்து விறுவிறுத்து உடம்பெல்லாம் புழுதியாக, ஆக்ரோஷ பசியுடன்.நேற்று எனது குழந்தைகள் மணலில் விளையாடும் போது நிறைய பேர் அதில் கிருமி இருக்கும் விளையாட விடாதிர்கள் என்று ஏகப்பட்ட அட்வைஸ்.பசங்களோ எதற்கும் செவி சாய்க்காமல் மணலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விளையாடியக் கொண்டிருந்தனர். தினமும் அழைத்துச் செல்ல விருப்பம்தான் அலுவக வேலையின் காரணமாக சனி மற்றும் ஞாயிற்று கிழமையில் தான் நம்மாள அழைத்துச் செல்ல முடிகிறது. சென்னை போன்ற பெருநகரத்தில் முக்கால்வாசி CBSE தனியார் பள்ளிகள் A/C அறைகளைப் போட்டு, குழந்தைகள் விளையாடுவதும், படிப்பதும், உண்ணுவதும் என்று எல்லாமே அந்த AlC அறைக்குள் தான். போதிய விளையாட்டு மைதானமும் இருப்பதில்லை. அவர்களின் வாழ்க்கையை இன்றைய பெற்றோர்களாகிய நாம் ஒரு பிராய்லர் கோழி போல படிப்புதான் வாழ்க்கை என்று அடைத்து வாழும் நிலையைக் காணும் போது நகரத்து வாழ்க்கை நரகம் தான் என்று தோன்றுகிறது. நாட்டுக் கோழிகளாய் சுந்திரமாய் சுற்றி, உண்டு நல்ல காற்றைச் சுவாசித்து இருந்த நாமே நம் குழந்தைகளை படுபாதாள குழியில் தள்ளும் ஒரு அவல நிலையில் தான் நாம் இருக்கிறோம் எனும் போது மிக்க வருத்தமே. குழந்தைகளுக்கான படிப்பதற்கான பள்ளித் தேர்வின் போது இன்றைய பெற்றோர்களாகிய நாம் படிப்பு என்ற ஒன்றை மட்டும் குறிக்கோளாகப் பார்காமல், விளையாட்டு, சுத்தமான திறந்த வெளிக் காற்று என்றுநம் கவனைத்தையும் அதில் செலுத்தி நல்ல ஆரோக்கியமான படிப்பை தர முன்வர வேண்டும்.அத்தகைய ஆரோக்கியமான கல்வியை நம் குழந்தைகளுக்குத் தர முயற்சி செய்யலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக