கோடை விடுமுறைக்கு இந்த வருடம் குழந்தைகள் மற்றும் என்னுடைய பள்ளி நண்பர்களின் குடும்பத்துடன் ஆனைமலை Top View, பரம்பிக்குளம், வால்ப்பாறை, குரங்கு அருவி என்று கடந்த மூன்று நாட்களாக இயற்கை எழிலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடித் தீர்த்து விட்டோம். இது ஒரு அருமையான சுற்றுலா என்று சொன்னால் மிகையாகாது. இதை ஏற்பாடு செய்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. வாழ்க்கை ஓட்டத்தில் அப்பப்ப இந்த இளைப்பாரல் குடும்பத்துடன், நண்பர்களுடன் தேவை .அதை இந்தச் சுற்றுலா பூர்த்தி செய்து விட்டது.இன்று காலை என் குழந்தை இன்னோரு முறை செல்ல வேண்டும் என்கிற சொல் ஒன்றே போதும். நாம் நம் குழந்தைக்கு தந்த மகிழ்ச்சி விருந்தின் எல்லையை என்னால் உணர முடிந்தது. நம் காலத்தில் இத்தகைய மகிழ்ச்சி விருந்து தாத்தா, பாட்டி ஊருக்குச் சென்றாலே அமைந்து விடும். இன்றோ குழந்தைகள் படிப்பு என்ற பெயரில் நம்மளே விட அதிக மன உளச்சலுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு இத்தகைய சுற்றுலா நிச்சயம் தேவை. உங்கள் குழந்தைகளையும் உங்களால் முடிந்த இடத்திற்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியில் திகைக்கச் செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக