நான் சிறுவயதில் செங்குளம் எனும் கிராமத்தில் தான் வளர்ந்தேன். அங்கு அற்புதமான பல நினைவுகளை கடந்து வந்து இருக்கின்றேன். அவற்றில் ஒன்று தான் இந்த புளிய மரம். புளியம்பழ சீசன் வந்தால் போதும் நானும் எனது அண்ணனும் சற்று காற்று அடித்தால் போதும் மஞ்சப்பையே எடுத்துக் கிட்டு வழி நெடுக இருக்கும் புளியம் மரத்தில் இருந்து விழும் புளியம் பழத்தை எடுக்கப்போயிருேவாம். வீட்டுக்குத் தேவையான புளியம்பழத்தை நாங்களே அவ்வாறு எடுத்து வந்துவிடுவோம். அப்புறம் நல்லா வெயிலில் காயவைத்து அதில் உள்ள கொட்டையே எடுத்து அதை அவித்தும் வருத்தும் திண்போம். சில நேரத்தில் புளியைத் தண்ணீரில் கரைத்து சிறிது சர்க்கரையைச் சேர்த்து வெயிலுக்கு இதமாக குடிப்போம். புளியம்காயை கல்லில் வைத்து உரசி துவையல் மாதிரி செய்து சாப்பிடுவோம்.கரண்டு போனால் புளிய மரத்து அடியில் அமர்ந்து அரட்டையைப் போடுவோம். புளிய விதைகளே உரசி தாயமும் விளையாடுவோம். அதே புளிய மரத்தில் ஏறி மரத்துக் குரங்கு விளையாட்டு விளையாடுவோம். ஒவ்வொரு கிராமத்து சிறுவனும் இத்தகைய நினைவுகளே நிச்சயம் கடந்து வந்து இருப்போம். அத்தகைய நினைவுகளே உங்களுடன் பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி நண்பர்களே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக