நம்முளுடைய சிறு வயதில் ஹமாரா பஜாஜ் இந்த வாசகத்தக் DD ல கேட்காத ஆளே இருக்க முடியாதுன்ன நினைக்கிறேன்.அப்ப நம்ம ஊருல வங்கி மானேஜர், ஒரு சில பணக்காரங்க மட்டும் தான் இந்த வண்டிய வச்சிருக்காங்க.பஜாஜ் செடாக்.ஒரு காலத்தில் 50 சதவீத மார்க்கெட் ஷேர் உடன், இந்திய ஸ்கூட்டர் செக்மெண்டில் கோலோச்சி கொண்டிருந்த நிறுவனம் பஜாஜ். இதற்கு சேதக் ஸ்கூட்டரும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல. மிகவும் மலிவான விலையில் கிடைத்த தரமான ஸ்கூட்டர் என்பதால், நாடு முழுவதும் வெகு விரைவிலேயே சேதக் பிரபலமானது. பொதுமக்கள் இதனை ஹமாரா பஜாஜ் (நம்ம பஜாஜ்) என அன்போடு அழைத்தனர்.ஏறத்தாழ 34 ஆண்டுகளாக உற்பத்தியில் இருந்து வந்தது. கடைசியாக 2006ம் ஆண்டில்தான் சேதக் ஸ்கூட்டரின் உற்பத்தியை பஜாஜ் நிறுவனம் நிறுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக