சனி, 7 நவம்பர், 2020

தென்மலை

 வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்று கிழமையில் குற்றால சீசனுக்கு குற்றாலத்தில் குளிக்கச் சென்ற போது பகலில் மிக நீண்ட நெடிய வரிசையில் நின்று குளிக்கும் அளவிற்கு கூட்ட நெரிசல், சென்ற அருவி எல்லாம் கூட்டம் அலைமோதியது. என்னுடைய கல்லூரி காலத்து நண்பர் தென்காசி மண்ணுக்குச் சொந்தக்காரரான ஆனந் காசிராஜனை தொடர்பு கொண்டு அவரின் வழிகாட்டுதல் படி பாலருவி, தென்மலைக்கு செல்ல ஆயத்தம் ஆகி சென்றோம். பாலருவி கேரளா எல்லையில் உள்ளது. மிகவும் அற்புதமான அருவி இந்த அருவியில் குளிக்க கேரளா வனத்துறையினர் ஒரு நபர் ஒன்றுக்கு 25 ரூபாய் வாங்குறாங்க. இந்த அருவியில் மக்கள் நெருக்கடி இல்லை, ஆண் மற்றும் பெண்கள் குளிக்க தனித்தனி பகுதி, எப்பொழுதும் பாதுகாப்பு நிறையவே உண்டு. இந்த வழியில் அடுத்த சுற்றுலா இடம் தென்மலை அணை, இங்கு அணைக் காட்சி, பூங்கா, இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட Eco Tourism திட்டம் அற்புதம். அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரில் குளித்தது அற்புதம். உண்மையில் இந்த இரு இடத்தையும் சுற்றிப் பார்க ஒரு நாள் தேவைப்படும். இது குற்றாலத்தில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தான் இருக்கும். வாய்ப்பும் சூழ்நிலையும் உங்களுக்கு அமையும் மாயின் தாராளமாக சென்று வரலாம்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக