ஞாயிறு, 8 நவம்பர், 2020

பிரானுர் ரஹ்மத் பார்டர் பரோட்டா கடை

 தென்மலை மற்றும் பாலருவியில் நன்கு சுற்றி குளித்துவிட்டு சுவையா சாப்பிட ஒரு கடையை தேடுவோம்? அப்படினா நாம மறக்காம செல்ல வேண்டிய கடை பிரானுர் ரஹ்மத் பார்டர் பரோட்டா கடை .அந்தக் கடை சுற்று வட்டாரத்தில் மட்டுமல்ல அனைத்து தமிழ் அன்பர்களுக்கும் தெரிந்த ஒரு அடையாளம். இந்தப் புரோட்டா கடை அத்தனை ருசி, சுவை, இங்கு புகழ் பெற்றது புரோட்டா மட்டுமல்ல வீச்சு பரோட்டா ,முட்டை பரோட்டா , கொத்து பரோட்டா என பல வகைகள் உண்டு, இரவு எங்களுடைய உணவு இங்கு தான். நல்ல சிறப்பான உணவாக அமைந்தது. இப்பொழுது கூட அந்த சுவையை நினைத்தால் இன்னோரு முறை நம்மளை சாப்பிட சுண்டி இழுக்கும்.பார்டர் பரோட்டா கடை என்று பல பெயரில் கடைகள் இருந்தாலும் ரஹ்மத் கடை தான் தனித்துவம் மிக்கது. இங்கு நாட்டுக் கோழி மட்டும் தான் கிடைக்கும். பிராய்லர் கோழி கிடையாது. அந்த வகையிலும் எனது முழு ஆதரவும் இந்தக் கடைக்குத் தான். இந்தப் பக்கமா போக நேர்ந்தால் சும்மா ஒரு விளாசு விளாசுங்க.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக