இயந்திரம்
போன்ற வாழ்க்கையில் இருந்து சிறிது தப்பித்து வேறு ஒரு மாற்றத்தைப்
பார்க்க மாட்டோமா? என்று எண்ணி ஏக்கத்தில் இருந்த தருணத்தில், அலுவலக
நண்பர்களுடன் இன்று ஒகேனக்கல் செல்ல ஒரு அருமையான வாய்ப்பு அமைந்தது, இதோ இன்று ஒகேனக்கல் நோக்கிப் பயணம் ஆரம்பிச்சாச்சு. ஒகேனக்கல் பயணம் எனக்கு இதுதான் முதல் முறை.
ஒகேகை்கல் நீர் அருவி சுமார் ஒரு 20 மீட்டர் உயர்த்தில் இருந்து விழும் நீரின் சத்தம் கொஞ்சம் மனதிற்குப் பயமாக இருந்தாலும், அதைப் பார்க்கும் போது வெள்ளியை உருக்கி வார்த்தது போல் இருக்கும். இதன் அழகைப் பார்க்கும் போது குளிக்கும் எண்ணம் தானாக வரும். இந்த அருவியில் மதியம், இரவு, காலை என்று மூன்று வேளையும் குளித்து குதூகலத்தில் திகைத்தோம். பரிசல் அனுபவம் எங்களுக்கு புதுமையான அனுபவமாக இருந்தது. மற்ற எல்லா இடத்திலும் நாம் போட்டில் சென்றிருப்போம். ஆனால் இந்தப் பரிசல் மூலம் நாம் செல்லும் போது அருவிகளின் அருகே சென்று காண்பிப்பார்கள். அது நமக்கு திகிலோடு கலந்த மகிழ்சியைத் தரும். இந்தத் திகிலோடு சுற்றி முற்றிப் பார்த்தால் கார்பனோட் பாறைகள் தான் தெரியும். இயற்கையை ரசிப்பது, பரிசல் சவாரி, அருவியில் குளியல், இயற்கையான முறையில் மீன் குழம்பு, வறுவல், எண்ணெய் மசாஜ் என்று கண்களுக்கும், நா ருசிக்கும், நம் மனதிற்கும் மகிழ்ச்சி அளிக்கிறது இந்த ஒகேனக்கல் . வாய்ப்பு இருப்பின் நண்பர்களே தாராளமாக சென்று மகிழ்ச்சியில் திகைத்து வரலாம். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீசன் காலம் என்பது கூடுதல் தகவல். தங்குவதற்கு நீர் விழ்ச்சிக்கு மிக அருகிலே ஓட்டல் தமிழ்நாடு உள்ளது. குடும்பத்துடன் தங்குவதற்கு ஏற்ற அறை மற்றும் உணவு அருமையாக உள்ளது. அருவியில் பெண்கள் குளிப்பதற்கு உடை மாற்றுவதற்க்கு என்று தனி இடம் உள்ளது குடும்பத்துடன் செல்பவர்களுக்கு பயம் தேவையில்லை.
ஒகேனக்கல் மதியம் 1.30 க்கு வந்து சேர்ந்தோம். ஓட்டல் தமிழ்நாடு விடுதியில்
தங்கி சிறிது நேரம் இளைப்பாறி விட்டு ஒகேனக்கல் அருவியை நோக்கிப்
பயணித்தோம். போகும் வழியில் இங்கு இயற்கையை ரசித்துக் கொண்டு உணவு
அருந்தும் உணவுக் கூடம் நிறைய உள்ளது. அங்கு நமக்குத் தேவையான மீன்
வகைகளைத் தேர்வு செய்து கொடுத்து சமைக்கச் சொல்லிவிட்டு நீர் விழ்ச்சியை
நோக்கிப் பயணித்தோம். தமிழகத்தில் நான் பார்த்த நல்ல நீர் விழ்ச்சிகளில்
இதுவும் ஒன்று. அதில் குளிப்பவர்களுக்கு எண்ணெய் மசாஜ் செய்பவர்கள் நிறையப்
பேர் இருக்குகிறார்கள். அதில் நானும் எனது அலுவலக நண்பர்களும் முதல்
முறையாக எண்ணெய் மசாஜ் செய்து அருவியில் குளித்த தருணம் அற்புதம். அதைச்
சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை. எவ்வளவு பெரிய மன அழுத்தமோ, வேலைப் பளுவோ
இருந்தாலும் அனைத்தும் இந்த நீர்வீழ்ச்சியில் குளித்தவுடன் பஞ்சாய்ப்
பறந்து போய்விட்டது என்றால் மிகையாகாது. அதன் பிறகு இயற்கையான முறையில்
சமைத்த மீன் குழம்பும், வறுவலும் ரெடியாக இருக்க ஒவ்வொருவரும் சாப்பாட்டை
ஒரு கை பார்த்து விட்டோம். வாழ்வில் மறக்க முடியா சாப்பாடு. அற்புதமான
சுவை. இன்றைய தினம் சிறப்பாய் முடிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக