சனி, 7 நவம்பர், 2020

குற்றாலம்

 பிரானுர் ரஹ்மத் பார்டர் கடையில இரவு உணவு சாப்பிட்டுட்டு குற்றாலத்தில் வந்து அறையில் சிறிது நேரம் ஒய்வெடுத்துவிட்டு இரவு ஒன்பது மணிக்கு குற்றால அருவியின் அழகை ரசித்து குளிக்க கிளம்பியாச்சு. வேலைக்குப் போற அவசரத்துல தினம் ஒரு பதினைந்து நிமிஷம் காக்காக் குளியல் போட்டுட்டு அரக்கப் பரக்க வேலைக்கு போன எனக்கு உண்மையிலே அந்த நாள் அற்புதமானது தான்.இரவு ஒன்பது மணியில் இருந்து விடியக் காலை நான்கு மணி வரை பேரருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி என்று இரவு முழுவதும் நல்ல குளியல். என் வாழ்நாளிலே இத்தகைய இரவு முழுவதும் குளித்த குளியல் இதுதான் முதல் முறை. அவ்வளவு உற்ச்சாகம், மகிழ்சி, புத்துணர்ச்சி என்று அந்தக் குளியலை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இரவு நேரத்தில் கூட்டமும் ரொம்பக் கம்மி தான். பெண்களுக்கு பேரருவியும், ஐந்தருவியும் மிக்க பாதுகாப்பான தனித் தனி பகுதியில் குளிக்க வசதி உள்ளது. மற்ற அருவியில் இரவு குளியலுக்கு பெண் களுக்கான பாதுகாப்பு சற்று கம்மிதான். இந்த அருவிகளை பார்க்க, அவற்றில் குளிக்க நாம் மிகவும் சிரமப்பட தேவையில்லை. நமக்கு உதவுவதற்கு ஆட்டோக்கள் நிறைய இருக்கின்றது. ஆட்டோகாரரிடம் பேரம் பேசி, ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து விட்டால் போதும், அனைத்து அருவி களுக்கும் அழைத்துச் சென்று விட்டு உங்களை நீங்கள் தங்கியிருந்த இடத்திற்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள். நான் பயணித்த குற்றால அருவியின் பயணத்தை தந்தாச்சு பின்ன என்ன குற்றால சீசனுக்கு குற்றாலத்திற்குச் சென்று குதுகலமாக குளிங்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக