ஞாயிறு, 8 நவம்பர், 2020

நெருஞ்சி முள்

 சமிபத்தில் என்னுடைய அலுவலக நண்பருக்காக இந்த நெருஞ்சி முள்ளை வாங்கச் சென்றேன். அதனுடைய ஒரு கிலோ விலை 400 ரூபாய். இதனுடைய மருத்துவ குணம் அற்புதம்.சிறுநீரக கோளாருக்கு இது ரொம்ப நல்லது என்று நண்பர் வாயிலாக அறியப் பெற்றேன். இது நம்ம ஊரில் மானவாரியாக ஆங்காங்கே முளைத்துக் கிடக்கும். அப்பப்ப நம்ம சைக்கிளையும் பஞ்சர் ஆக்கிவிடும். வேலையே இல்லை என்று புலம்பும் நம்ம கிராமவாசிகளுக்கு இது ஒரு நல்ல வருமானத்தை தரும் என்கின்ற நோக்கத்தில் இதை பதிவிடுகிறேன். இதற்கான முதலீடு எதுவும் இல்லை. உழைப்பு ஒன்றே போதும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக