என்னுடைய கல்லூரி காலத்து நண்பர் மற்றும் தென்காசி மண்ணுக்குச் சொந்தக்காரர் ஆனந் காசிராஜன். இவர் தான் கடந்த மூன்று வருடமாக நான் விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் போதெல்லாம் தென்காசி, குற்றாலம், திருநெல்வேலி, பாபநாசம், தென்மலை, குண்டாறு, அச்சன் கோயில் என்று ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பகுதியைச் சொல்லி .. அந்த இடத்தை சுற்றிப் பார்க்க நம்பிக்கையான கார் ஓட்டுனர் மற்றும் கார் ரெடி பண்ணித் தந்தவர். சமிபத்தில் எங்கள் அலுவகத்தில் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் குடும்பத்துடன் அத்தகைய இடத்திற்கு பயணிக்க சென்ற போது நண்பர் தான் அனைத்தையும் கவனித்துக் கொண்டார். அவர்களும் சென்று வந்து அருமை என்று சொன்னார்கள்.
kasi
வெள்ளி, 9 ஜூலை, 2021
ஞாயிறு, 18 ஏப்ரல், 2021
கியர் சைக்கிள்
இதுவரை கியர் சைக்கிள் ஓட்டாத நான்.நீயுயார்க் சென்ரல் பார்க்கில் கியர் சைக்கிள் ஓட்டும் ஒரு வாய்ப்பு அமைந்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சைக்கிளில் சென்று இயற்கை எழிலை ரசித்தோம்.
வெள்ளி, 2 ஏப்ரல், 2021
குரங்கனி
ஒவ்வொரு வரும் வாழ்க்கை ஒட்டத்தில் பணத்தைத் தேடி வெவ்வேறு திசையில் ஓடினாலும் நமக்குக் கிடைக்கக் கூடிய அரிதான இயற்க்கை எழிலை ரசிக்க ஒரு சில வாய்ப்புக்களை அமையும் அத்தகைய வாய்ப்பைத் தவற விடமால் கெட்டியாக பிடித்துக் கொண்டேன்.உங்களுக்கும் இத்தகைய வாய்ப்பு அமைந்தால் தவற விடாமல் இயற்க்கையை ரசியுங்கள் நண்பர்களே. அவைகள் தான் நம் மனதை மகிழ்ச்சியில் திகைக்கச் செய்யும். பணம் ஒரு போதும் அத்தகைய மகிழ்ச்சியைத் தராது. இடம் குரங்கனி.
போடி வீரபாண்டி
அலுவலக நண்பர் அருணின் கல்யாணத்திற்கு நண்பர்களுடன் போடி சென்று அங்குள்ள பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம். அதிலும் முக்கியமாக வீரபாண்டி சென்றது மறக்க முடியாத நினைவலை.என்னுடைய கல்லூரி நாட்களில் ஜீவாவின் வீட்டுக்குச் சென்று வந்ததுக்குப் பிறகு இன்று தான் அதற்கான வாய்ப்பு அமைந்தது. மிகவும் அற்புதமாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அருவியில் குளித்து மகிழ்ச்சியில் திகைத்தோம்.
பள்ளிக்கூட மணி
பள்ளிக்கூட மணி மதியச் சாப்டிற்கு அடித்ததும் தட்டை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி சாப்பாட்டிற்க்காக வரிசையில் நின்றோமே அதிலும் முட்டை போடும் நாள் என்றால் நம்முடைய வேகம் இன்னும் பன்மடங்கு அதிகமாக இருக்கும். ஞாபகம் இருக்கா நண்பர்களே? ...
செவ்வாய், 9 மார்ச், 2021
சூரியன்
நீண்ட நாட்களுக்குப் பிறகு சூரியன் மறைவே நானும், எனது மனைவியும் மற்றும் குழந்தையும் ரசித்துப் பார்த்த காட்சி. குழந்தை இதைப் பார்த்து ஆனந்தத்தில் துள்ளி விளையாடியதைக் கண்டு எங்கள் மனம் ஆனந்தத்தில் திகைத்தது. இயற்கையை நம் குழந்தை ரசிக்கும் அழகே தனிதான். இடம் ஓட்டியம்பாக்கம்.
செவ்வாய், 5 ஜனவரி, 2021
கிரிக்கெட்
இன்றைய நமது கிரிக்கெட் டீமின் ஆட்டம் மற்றும் எண்ணிக்கை அற்புதம். அலுவலக நண்பர் கார்த்திக் காந்தியின் மிரட்டல் பவுலிங் மற்றும் பெட்டிங் அற்புதம். அவரின் ஆதரவால் முதல் மெட்ச் எளிதாக வெற்றி பெற முடிந்தது. கல்யாணம் ஆகி இரண்டு வாரம் கூட முடியாத தம்பி போத்தி ஆர்வமிகுதியால் இன்றைய போட்டியில் கலந்து கொண்டு வெறித்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இன்றைக்கு நமது டீமின் எல்லோரின் உழைப்பும் அற்புதம்.தம்பி சுந்தர மூர்த்தி,முத்து, தேசிங்கு, அருண், ஆனந்து அவர்களின் பங்கு அற்புதம். இனி வரும் வாரத்தில் இதே எண்ணிக்கை மட்டுமல்ல இதை திறமையை வெளிப்படுத்தி வெற்றிகளைக் குவிக்க வேண்டும்.
திங்கள், 4 ஜனவரி, 2021
மணலாறு
அடர்ந்து விரிந்த காடுகளுக்கு நடுவே ஒரு தனித்தீவு போல் காட்சி தரும் இந்த இடம் மணலாறு. இங்கிருந்து ஒரு அரைக் கிலோ மீட்டர் மலையில் ஏறிச்சென்றால் மணலாறு அருவிக்குச் செல்லலாம்... அதுவும் கூட்ட நெரிசல் இல்லாமல் ஆனந்தமாக இயற்கையோடு ஒன்றிக் குளிக்கலாம். இதன் வழி நெடுக ஏகப்பட்ட ஆறும் உண்டு.இது தென்காசியில் இருந்து 34 km தொலைவில் அமைந்துள்ளது.இது போன சீசன்ல நான் அங்கு சென்றிருந்த தருணம். சீசனில் குற்றாலத்திற்குச் சென்று வர நினைக்கும் நண்பர்கள் அப்படியே இங்கேயும் சென்று வரலாமே? பின் குறிப்பு - இது அச்சன் கோவில் செல்லும் வழியில் உள்ளது. பண்பொழியில் இருந்து 22 km.செங்கோட்டையில் இருந்து பஸ் உண்டு.
வெள்ளி, 18 டிசம்பர், 2020
தாத்தா
மிகவும் கண்டிப்பான அப்பாக்கள் எங்கேயுமே கண்டிப்பான தாத்தாக்களாக இருப்பதில்லை... ஒரு வேளை கண்டிப்பால் சாதிக்க முடியாது என்பதை தன் அனுபவத்தால் உணர்ந்தவர்தான் தாத்தா போல ...
வியாழன், 3 டிசம்பர், 2020
Swimathon
என் முதல் தொலைநீச்சல் (Swimathon).26.8.2018 நடைபெற்ற சும்மத்தான் போட்டியில் நானும் அலுவலக நண்பர் வேல்முருகனும் போட்டியில் பங்கு பெற்று 1.5 கிலோ மீட்டரை நீச்சல் அடித்தே மிகக் குறைந்த நேரத்தில் எனது அலுவலக நண்பர் வேல்முருகன் 38 நிமிடத்திலும்(freestyle), நான் 42 நிமிடத்திலும்(breaststroke) கடந்து மெடல் வாங்கிய தருணம்.சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்த சென்னை ஸ்டார் ஸ்விம்மர்ஸ் குழுவினருக்கு நன்றி. அருமையான மெடலுக்கும், சான்றிதழுக்கும் பாராட்டுக்கள்.
திங்கள், 30 நவம்பர், 2020
ஹமாரா பஜாஜ்
ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம்
பாலிய பருவத்தில் இருந்து கல்லூரி முடிக்கும் வரை நம்ம ஊர் ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டத்திற்கு நண்பர்களுடன் செல்லும் வழக்கம். சும்மா வடம் பிடித்து நண்பர்களுடன் சேர்ந்து இழுத்து நம்மால் தான் இந்த தேர் நகர்கிறது என்ற கர்வம். விருதுநகர் மாவட்டத்திற்கே அன்று ஒரு நாள் விடுமுறை.கூட்டம் சும்மா பிச்சு உதறும். அந்த அழகிய நாட்கள் நம்மைப் போன்ற நண்பர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்று சொன்னால் மிகையாகாது. கால ஓட்டத்தில் கடந்த பத்து வருடம் மேலாக அந்த அரிய வாய்ப்பை தவற விட்டுட்டேன்.
செருப்பு
என்ன தான் இப்போ இருக்கின்ற பேட்டா , அடிடாஸ், நைக், பூமா எல்லாம் சும்மா... இது கிட்ட நெருங்க முடியாது ... சும்மா அப்படி நீடித்து உழைக்கும் .அதிலும் அறுந்தாலும் ஊக்கு இல்லைனா பின்னு போட்டு ஒட்டுவோம். லேசா மழை பெய்தால் போதும் சகதி தண்ணீயில் நடந்தால் பின்புறம் கால் முதல் முதுகு வரை சேற்றை வாரி அடிச்சு விடும்.. அந்த Paragon 20 ரூபாய் அப்போ ... அதே வாரம் ஒருமுறை ஜீல் ஜீல் சோப்பு போட்டு கழுவி காய வைச்சதெல்லாம் ஒரு காலம் ... உண்மையில் இன்று நினைக்கையில் அணிந்து சென்ற செருப்பு கூட ஒரு சுகமான அனுபவம் ... இதை எல்லாம் நினைச்சாலே எவ்வளவு கஷ்டத்துல இருந்தாலும் லைட்டா சிரிப்பு வருது ... அப்ப நண்பர்களே உங்களுக்கு ?
அதலைக்காய்
இதன் பெயர் அதலைக்காய். இதனைப் பொரியல் செய்தால் சுவை அருமையாக இருக்கும். இந்தக் காய் செடியில் இருந்து பறித்த சில மணி நேரத்தில் சமையல் செய்தாக வேண்டும் இல்லைனா வெடித்து விடும். இந்தக் காரணத்துனாலதான் நம்ம விருதுநகர் மாவட்டத்தைத் தாண்டி சமையலுக்கு செல்ல முடியாத நிலை. இதுவும் பாகற்காய்க்கு இணையா மருத்துவ குணம் கொண்டது. கசப்புப் தன்மை கொஞ்சம் இருந்தாலும் ருசி சும்மா சிறப்பா இருக்கும்
வியாழன், 12 நவம்பர், 2020
வரைதல் போட்டி
எனது மகள் கந்தன்சாவடியில் உள்ள Kayo international PreSchool லில் அனைத்து தரப்பு மாணவ , மாணவியர்களுக்காக நடத்திய Drawing போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது பரிசைப் பெற்றுள்ளார். இனிவரும் காலத்திலும் எனது மகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
கதை சொல்லும் போட்டி
எனது மகள் படிக்கும் பள்ளியில் சாங்ஃபோர்டு தமிழ் செம்மொழி மன்றம் சார்பாக கதை சொல்லும் போட்டி நடைபெற்றது. அதில் எனது மகள் முதலாம் வகுப்பிற்கான கதை சொல்லும் போட்டியில் முதல் பரிசுப் பெற்ற பாராட்டு சான்றிதழ். எனது மகளை விட நாங்கள் மகிழ்ச்சியில் திகைத்த தருணம். ஒவ்வொரு நாளும் என் குழந்தை தூங்குவதற்கு முன்பு நான் சொன்ன வித விதமான கதை வீண் போகவில்லை. வாழ்த்துக்கள் அன்பு மகளே.
என்.எஸ்.எஸ் முகாம்
கல்லூரி நாட்களில் படித்த நான்கு வருடமும் தவறாமல் என்.எஸ்.எஸ் Campக்கு செல்லுவது வழக்கம். அந்த நான்கு வருடமுமே NSS Best Volunteer award வாங்கியது எனக்கு மகிழ்ச்சியே. அங்குதான் சமுதாய சிந்தனை மேலோங்கியது என்றால் மிகையாகாது. அங்கு தான் அடித்தட்டு மக்களின் நிலை அறியப்பேற்றேன். அங்கு 15நாட்கள் மாணவர்கள் தங்கி குளம், கோயில், சாலையோர சமுதாயக் கூடத்தில் உள்ள முட்புதர்களை அகற்றி, அது போக இரவு நேரத்தில், கலை நிகழ்ச்சிகள் முலம் நம்முடைய பன்முகத் திறமையை வெளிப்படி த்தியது மற்றும் கிராம மக்களை மகிழ்வித்தது என்று இன்றும் கூட நம் கண்களை விட்டு அகலவில்லை. கல்லூரியில் Senior உடன் நன்கு பழகும் வாய்ப்பு. இதன் மூலம் நகரவாசிகள் கிராம சூழ்நிலைகள் எவ்வாறு உள்ளது , அதில் அவர்கள் படும் தூயரத்தை நம்மால் எளிதில் உணர முடிந்தது.
football
Aquatic complex
என்னுடைய இளமைப் பருவம் முழுவதும் செங்குளம் எனும் கிராமத்தில் தான் நகர்ந்தது. அந்த கிராமத்தில் தான் நான் நிச்சல் கற்றுக் கொண்டது. எனது தந்தை கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அவருக்கு நீச்சல் தெரியாது. எனது அம்மாவுக்கு ஒரளவு தெரியும். முதல் முறையாக செங்குளத்தில் உள்ள சங்கர் கிணற்றில் எனக்கும், அண்ணனுக்கு, தங்கைக்கு கற்றுத் தர எனது அன்னைஅழைத்துச் சென்றார்கள். உடன் அம்மாவின் அக்கம் பக்கத்து வீட்டு தோழிகளும் வந்திருந்தனர்.புது சோப்பை தண்ணிரில் நனைப்பதற்காக கிணற்றில் குனிந்த போது நான் தவறி உள்ளே விழுந்து விட்டேன். எனது அம்மாவுக்கும்,சுற்றி இருந்த தோழிகளும் அந்த அளவுக்கு நீச்சல் தெரியாது, வேறு ஆட்களும் அங்கு இல்லாததால் எனது அன்னை தனி ஆளாகப் போராடி என்னை உயிருடன் மீட்டெடுத்தார். உண்மையிலே என் தாய் தைரியமானவர் தான். ஒவ்வொருவருக்கும் ஜனனம் என்பது தாயின் மூலம் ஒரு முறைதான் நிகழும். ஆனால் எனக்கு மட்டும் இருமுறை நிகழ்ந்தது என்றால் மிகையாகாது. அன்று முதல் சுமார் இரண்டு வருடம் நீச்சல் கற்றுக் கொள்ளப் பயந்து நடுங்கிய எனக்கு ஒரே நாளில் எனது சித்தப்பா கிருஷ்ணன் அவர்களால் கற்று இன்று இருபதுக்கும் மேல் லெப் நீச்சல் அடிக்கக் கூடிய நிலைக்கு உயர்ந்ததை எண்ணிப் பெருமை அடைகின்றேன். எதைக் கண்டு பயந்து நடுங்கினேனோ அதில் சிறந்து விளங்க உதவிய சித்தப்பா கிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி. நீண்ட நெடிய கிராமத்து வாழ்க்கைக்குப் பிறகு 2007ல் சென்னையில் உள்ள நந்தனம் YMCA நீச்சல் குளத்தில் தான் மறுபடியும் நீச்சல் அடிக்க ஆரம்பித்தேன். அங்கு செல்வம் சார் மூலம் முங்கு நீச்சல் ( தண்ணீருக்கு அடியில்) 30 மீட்டருக்கும் மேலாக செல்லக் கற்றுக் கொண்டேன். நான் வீடு மாறி சைதாப்பேட்டையில் இருந்து பெருங்குடிக்கு வந்த பிறகு வேளச்சேரி Aquatic complex ல் உள்ள நீச்சல்குளம் தான் என்னை நீச்சலில் இன்னும் பன்மடங்கு உயர்த்த உதவியது. கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக நீச்சல் குளத்தில் சென்று தினமும் குளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளேன்.நான் பார்த்ததில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீச்சல் கற்றுக் கொள்ள விரும்புவர்களுக்கு வேளச்சேரி Aquatic complex தான் சிறந்தத் தேர்வு .நல்ல பயிற்சியாளர்கள், மிகவும் சுத்தமான நீச்சல் குளம். இந்திய மற்றும் தமிழக அளவில் நிறைய நீச்சல் போட்டி அங்கு தான் நடக்கும். நானே மூன்று முறை பங்கு பெற்று ஒன்றில் நூலிலையில் மூன்றாவது இடத்தை தவற விட்டுட்டுக்கிறேன். நீங்களும், உங்கள் குழந்தைகளும் நீச்சல் கற்றுக் கொள்ள விரும்பினால் தாராளமாக இங்கு சேர்க்கலாம். தொடர்ந்து அங்கு சென்று நீச்சல் அடிக்கும் பட்சத்தில் நீங்களும், உங்கள் பிள்ளைகளும் தலை சிறந்த நீச்சல் வீரராக உருவெடுப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது. https://goo.gl/maps/DYjZx4KscKL2
புதன், 11 நவம்பர், 2020
செவ்வாய், 10 நவம்பர், 2020
ஞாயிறு, 8 நவம்பர், 2020
நண்பர்கள்
எத்தனை நண்பர்கள் இருந்தும் நெருங்கிய நண்பனின் தோள்களின்மீது கைகளை போட்டுகொண்டு கதைகள்பல பேசிச்சென்ற அந்த அழகான பள்ளிநாட்கள் மறக்கமுடியாதவை!!!!!
கோலம்
கோலம் போடுவதற்க்கென்றே புதியதாக நோட்டு வாங்கி அதில் புதிய புதிய ரங்கோலிகளை வரைந்து அடுத்தநாள் அதை தன் வீட்டு வாசலில் வரைந்து அழகு பார்த்த அந்த அக்காக்களும் தங்கைகளும் போன்று இன்று ஏனோ காண முடியவில்லை!!!!!
தலையைச் சுத்தி காதைத் தொட்டு பள்ளியில் சேர்ந்தோம்
இப்படி தான் நாம தலையைச் சுத்தி காதைத் தொட்டு பள்ளியில் சேர்ந்தோம். அதனால் தான் என்னவோ நம்முடைய எல்லாப் பிரச்சனைகளையும் சும்மா இப்படி சுத்தி வளைச்சு தான் விடை தேடுறோம் போலயே.
புளியம் பழம்
புளியம் பழம் ருசித்து அனுபவித்தவர்களுக்கே இதன் அருமை தெரியும். ஆயிரம் நெஸ்லே கம்பெனிகளோ அல்லது காட்பரிஸ் கம்பெனிகளோ இயற்கையை வெல்ல முடியாது என்பதற்கு இது சிறந்த உதாரணம். போட்டோவை பாக்கும் போதே எச்சில் ஊறுதுல?
முட்டி போட வைத்தபோது
அன்று நாம் பள்ளிக்கு தாமதமாக வந்த போது, வீட்டுப் பாடம் செய்யாத போது, வகுப்பில் அடங்காத போது, தண்டனை என்ற பேரில் வாரண்டாவிலும், சில சமயம் கடும் வெய்யிலில் மண் தரையிலும் முட்டி போட வைத்த போது நம்முடைய முட்டியைத் தடவித் தடவிப் பார்த்தோமே நினைவிருக்கா நண்பர்களே? இன்றும் இத்தகைய தண்டனை வழக்கப்படுகின்றதா என்பது சந்தேகம் தான்?
வேப்பம் குச்சி
இன்று நாம் பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு முறை பற்களை தேய்ப்போம்.என் சிறுவதில் தாத்தா, பாட்டி ஊருக்குப் போனால் வேப்பம் குச்சி, கருவேலம் குச்சி, சாம்பல், கோபால் பற்பொடி இவை தான் அவர்களின் பிரதான பல் விளக்குவதற்க்கு உபயோகப்படுத்துவார்கள். நானும் அவ்வாரு ஊருக்குச் சென்ற போதெல்லாம் பயன்படுத்தி இருக்கேன்.சில நேரத்தில் வேப்பம் கொழுந்து இலையே என் தாத்தா, பாட்டி சாப்பிடுவதைப் பார்த்து சாப்பிட்ட தருணமும் உண்டும். அவர்களின் பல் இன்றும் எழுபது வயது ஆகியும் ஆட்டு எலும்பை அசல்டா கடித்து சாப்புடுறாங்க .நாம அப்படியா இரண்டு முறை பல் விளக்கியும் என்ன பயன்? ஏகப்பட்ட பல் சம்பந்தமான பிரச்சனையை நாளும் நாம் பார்க்கிறோம். இதற்கு தீர்வு தான் என்ன? . பழையபடி நம் முன்னோர்கள் பல் விளக்க பயன்படுத்திய முறைக்குத் தான் நாமும் மாறனும் போலயே. அத விட்டுட்டு இன்னைக்கு வரக்கூடிய பெஸ்ட்ல உப்பு இருக்கு, இனிப்பு இருக்கு, சாம்பல் இருக்கு, புதினா, கொத்தமல்லி இருக்குனு நம்மல நல்லா ஏமாத்திட்டு இருக்கானுங்க. ஆனா அயல் நாட்டுக்காரனுக்கு இங்கு இயற்கையா கிடைக்கின்ற வேப்பம் குச்சியை பாக்கெட் போட்டு நாம் வித்துட்டு இருக்கோம். நல்லவற்றை நாம் ஏற்றுமதி செய்து விட்டு கண்ட கண்ட பெஸ்ட்டை நாம் வாங்கி விளக்கிக்கிட்டு இருக்கோம் என்பது தான் உண்மை. நல்லவற்றை உபயோகிக்க முயற்சி எடுப்போமா?
கிராமத்தில்
மகிழ்சியாக கிராமத்தில் வாழ்வதற்கு எத்தனயோ வசதிகள் நமக்கு இருந்தும் நாம் பயின்ற கல்வி நம்மையெல்லாம் கிராமத்தை விட்டு பட்டணத்திற்கு அனுப்பி நாலு காசு பணம் சம்பாரித்து ஆடம்பரமாய் வாழ ஆசைப்பட்டதால் தான் இன்று நாம் கிராமத்தில் கற்ற நல்ல விஷயம், இயற்கை எழில், என அனைத்தையும் இழந்து நிற்கின்றோம் பட்டிணத்தில்..
இளமைப் பருவம்
எப்படி எல்லாம் வாழ்கையில் வாழ வேண்டும் என்று எங்களைப் பெற்றவர்களும் சொல்லித் தரவில்லை, எங்களைப் பார்த்துக் கிட்டவர்களும் எங்களுக்குச் சொல்லித் தரவில்லை. மகிழ்ச்சியாக வாழ்ந்தோம் எங்களிடம் இருந்ததைக் கொண்டும், கிடைத்ததைக் கொண்டும் எங்களுக்கு பிடித்த மாதிரி, எங்களுக்குத் தெரிந்த மாதிரி மகிழ்சியாக விளையாடிய இளமைப் பருவம் ஒரு வரப்பிரசாதம் தான்.