ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019
கானல் நீர்
நமக்கு வரக்கூடிய பிரச்சனை என்பது கானல் நீர் மாதிரி தெரிந்தாலும் பயப்படாம
கிட்டப் போனா ஒன்னுமே இருக்காது. நமது வாழ்க்கையிலும் இத்தகைய பயத்தை
நாம் துணிவுடன் எதிர் கொண்டு ஒரு சிலவற்றில் வெற்றியடைந்தும் இருப்போம்.
அந்த வெற்றிக்குப் பின்பு இதுக்காட இப்படிப் பயந்து நடுங்கினோம் என
நமக்குத் தோன்றி இருக்கும். இல்லையா நண்பர்களே?
மயில் இறகு
நம்மளுடைய சிறு வயதில் இந்த மயில் இறகை புத்தகத்திலும், டைரிக்குள்ளும்
வைத்து அதற்கு அரிசியையும், பென்சிலையும் சீவி சாப்பாடு வைத்து குட்டி
போடும் என்று தினம் தினம் திறந்து பார்த்து ... ஏமாற்றம் அடைந்து என்
அப்பாவிடம் கேட்டது நண்பனுக்கு மட்டும் மூன்று நாளிலே மயில் இறகு குட்டி
போட்டுருச்சுப்பா எனக்கு ஏன் மயில் இறகு குட்டி போடலனு ... அந்த டெக்னிக்க
.. அதான் அதன் மேல் பகுதியில் சிறிது கிள்ளி அருகில் வைக்கச் சொல்லித்
தந்தார். அதை இப்ப நினைச்ச சிரிப்புதான் வருது.
சனி, 2 பிப்ரவரி, 2019
மழை பெய்தால் போதும்
எங்கள் ஊர் வானம் பார்த்த பூமி. ஆதனால ஊரில் இருந்தவரை மழை பெய்தால் போதும் தண்ணீரை அண்டாவிலும், குடத்திலும், தொட்டியிலும் சும்மா பிடித்துப் பிடித்து ஊற்றி அது தான் குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு என்று பயன்படுத்துவோம். ஆனால் இன்று பிழைப்பைத் தேடி சென்னை வந்த நாம் இப்படி ஓடி ஓடி மழை நீரை சேகரிக்கிறோமா என்றால்? இல்லை என்பது தான் Uதில். பொதுவாக நாம் அனைவரும் மழை நீரை சாலைகளில் விட்டு கடைசியில் கடலில் தான் கலக்கிறது. மழை பெய்யும் நாட்களில் கூட லாரிகளில் தான் நாம் நீரை விலைக்கு வாங்கி தொட்டியில் விடுகிறோம். அன்று தண்ணியின் அருமையை உணர்ந்து மழைநீரைப் பிடித்தது போல் இன்று நாம் ஏன் மழை நீரை தொட்டியில் சேமிக்கக் கூடாது?. இதோ இந்தப் படத்தைப் பார்த்து முடிந்தளவு முயற்சி செய்யுங்கள் நண்பர்களே.
இப்ப எல்லாம் நமக்கு போன் வந்தாலும் சரி, நாம நண்பர்களுக்கு போன் பண்ணுனாலும் சரி எடுத்த உடனே ஏதாவது முக்கியமா?
இப்ப எல்லாம் நமக்கு போன் வந்தாலும் சரி, நாம நண்பர்களுக்கு போன் பண்ணுனாலும் சரி எடுத்த உடனே ஏதாவது முக்கியமா? அப்பறம் கூப்பிடட்டானு தான் சொல்லுறோம். இன்னும் சிலர் அழைப்பை எடுப்பதில்லை, இன்னும் சிலர் அழைப்பைக் கட் பண்ணிட்டு குறுஞ்செய்தில முக்கியமாடா? னு கேட்கிறோம். எதும் இல்லை ... பேசி ரொம்ப நாளாச்சேனு கூப்பிட்டேன் என்று பதில் அனுப்பினாலும் ஓ .. இன்னோரு நாள் பேசலாம் என்று குறுஞ்செய்தியை நிருத்திடுறோம். சரி வேலை நாள்ல தான் பிசியாக இருக்கானே என்று ஞாயிற்று கிழமை போன் பண்ணாலும் அழைப்பை எடுக்குறது இல்லை, திருப்பி கால் பண்ணி என்ன என்று கேட்பதும் இல்லை. எல்லோரும் இப்ப பிசியாகத்தான் வாழ்க்கையில் ஓடிக்கிட்டு இருக்கோம். அதுக்காக முக்கியமா இருந்தா மட்டும் தான் பேசணும்னா நாளடைவில் பேச்சு குறைந்து போச்சு, தொடர்பு இல்லாமல் நமக்குள் இருக்கும் அன்பு, பாசம், நெசம் எல்லாம் குறைந்து விட்டது. அது என்ன ? சும்மா பேசினா? அது சாதரணமா? உங்களுக்கு போன் பண்ணினால் அந்த நபர் சும்மா இருக்கார் என்று அர்தம் இல்லை. சொல்லப் போனால் யாருக்கும் இப்ப எல்லாம் நேரம் இல்லை தான். குழந்தைகள், வேலைப்பளு சம்பந்தமான மன அழுத்தம், எரிச்சல், தூக்கமின்மை, பிற பிரச்சனைகள் என்று பேசாமல் இருக்க பல காரணம் இருக்கின்றது. அதுக்காக பேசாமல் இருக்கக் கூடாது. அழைப்பை எடுக்க முடியாவிட்டாலும் பரவா இல்லை அதை பார்த்து விட்டு நேரம் கிடைக்கும் போது மறக்காமல் அழைத்து போன் பேசலாம்.முக்கியமா தகவலுடன் வரும் அழைப்பை விட எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சிரித்து பேசும் அந்த அழைப்பு தான் பெருசு. அதுனால இது மாதிரி வரும் சும்மா அழைப்பை தவற விடாதீர்கள்.
ஒரு ரூபாய் காயின் போனே மறக்க முடியுமா என்ன?
இந்த ஒரு ரூபாய் காயின் போனே மறக்க முடியுமா என்ன? கல்லூரி முடித்து வேலை தேடி சென்னை வந்த போது என்னிடம் போன் கிடையாது என் வீட்டிலும் போன் கிடையாது. என்னுடன் தங்கியிருந்த நண்பர்களின் போனுக்குத் தான் என் குடும்பத்தினர் இந்த ஒரு ரூபாய் காயின் போன் மூலம் தொடர்பு கொள்ளுவார்கள். இரண்டு ரூபாயில் அத்துணை குடும்ப உறுப்பினரிடம் பேசி அங்கு நடப்பதையும் இங்கு நான் என்ன செய்கின்றேன் என்ற தகவலையும் பறிமாறிய நாட்கள் ஒவ்வொருவரின் மனக் கண்ணை விட்டு அகழாது. நேரம் மற்றும் பணத்தின் அருமையை உணர்த்திய இந்த போனை மறக்க முடியுமா என்ன?
சிறு வயதில் ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தினத்தன்று
நம்முடைய சிறு வயதில் ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தினத்தன்று இங்க் பேனாக்களில் இங்கை நிரப்பிக் கொண்டு பள்ளியில் படிக்கும் ஒரு நண்பரையும் விடாமல் அனைவரின் சட்டையிலும் அடித்து சந்தோசமாக மகிழ்ந்த அந்த நாட்கள் அற்புதம். அதையும் தாண்டி நண்பர்கள் எல்லாம் அன்று நம்மை ஏமாற்ற பொய்கள் பல சொன்னாலும் நம்பாமல் விழிப்புடன் இருந்து நாம் ஏமாற இடம் கொடுக்காமல் இருந்த அந்த நாள் அற்புதம். அதே விழிப்புணர்வு எல்லா நாளும் நமக்கு இருந்தால் நம்மை யாரும் ஏமாற்ற முடியாது. இப்பொழுதெல்லாம் சிறுவர்கள் முட்டாள்கள் தினம் கொண்டாடுகிறார்களா என்பது கூட தெரியவில்லை?. பொய்யும் , பித்தலாட்டம் நிறைந்த இன்றய வாழ்கை நிகழ்வுகளை நாம் பார்க்கும் போதுஇனி தனியா முட்டாள் தினம் தேவையா? அது தான் நாளும் ஏமாற்றப் படுகிறோமே? அரசியல்வாதி, கார்பெரெட் கம்பெனி, அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு முதலிடு செய்யும் சிட் பண்ட், அப்புருவல் வாங்காத தனியார் நிதி நிறுவனம் ரூபத்தில்.
கல்லூரி காலத்தில் எடுத்த புகைப்படம்
இது
கல்லூரி காலத்தில் எடுத்த புகைப்படம். மதிய உணவு வேளையில் உலா வருவது வழக்கம். அவ்வாரு வரும் போது எடுத்த புகைப்படம்.எங்களின் குரு Sakkarai Rasu பரீட்சை என்றாலே அவர் வீட்டுக்குத் தான் சென்று படிப்போம். நண்பர் Jayakrishnan Giri யின் வீடு நம்ம EcE பின் புகழிடம் என்று சொன்னால் மிகையாகது. அந்த அளவிற்கு நண்பர்கள் குவிந்து கிடப்போம். அதில் படிப்பு, விளையாட்டு,அரட்டை என்று சொல்லிக் கொண்டே போகலாம். நம்ம ECE Labல சும்மா புகுந்து விளையாடக் கூடிய நண்பர் முத்தரசு, செண்பக ராஜா, ராஜா.மிகவும் அமைதியா தான் உண்டு படிப்பு உண்டுனு இருந்த ஜெகன். சவுண்டு கூடுத்தாலும் ஆசிரியாரால கண்டே புடிக்க முடியாத கார்த்தி .ECE யின் அஜித் ஜீவா (கொஞ்சம் ஓவர்தான்). பள்ளி நாட்களில் இருந்து கல்லூரி நாட்கள் வரை என்னுடைய பின்னாடி பெஞ்ச் பாலு
கல்லூரி காலத்தில் எடுத்த புகைப்படம். மதிய உணவு வேளையில் உலா வருவது வழக்கம். அவ்வாரு வரும் போது எடுத்த புகைப்படம்.எங்களின் குரு Sakkarai Rasu பரீட்சை என்றாலே அவர் வீட்டுக்குத் தான் சென்று படிப்போம். நண்பர் Jayakrishnan Giri யின் வீடு நம்ம EcE பின் புகழிடம் என்று சொன்னால் மிகையாகது. அந்த அளவிற்கு நண்பர்கள் குவிந்து கிடப்போம். அதில் படிப்பு, விளையாட்டு,அரட்டை என்று சொல்லிக் கொண்டே போகலாம். நம்ம ECE Labல சும்மா புகுந்து விளையாடக் கூடிய நண்பர் முத்தரசு, செண்பக ராஜா, ராஜா.மிகவும் அமைதியா தான் உண்டு படிப்பு உண்டுனு இருந்த ஜெகன். சவுண்டு கூடுத்தாலும் ஆசிரியாரால கண்டே புடிக்க முடியாத கார்த்தி .ECE யின் அஜித் ஜீவா (கொஞ்சம் ஓவர்தான்). பள்ளி நாட்களில் இருந்து கல்லூரி நாட்கள் வரை என்னுடைய பின்னாடி பெஞ்ச் பாலு
நம்முடைய காலத்தில் முக்கால் வாசி நண்பர்கள் முதலாம் வகுப்பு முதல் பன்னிரென்டாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் தான் படித்திருப்போம்
நம்முடைய காலத்தில் முக்கால் வாசி நண்பர்கள் முதலாம் வகுப்பு முதல் பன்னிரென்டாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் தான் படித்திருப்போம். எங்கள் வீட்டில் இருந்து நான் படித்த பள்ளிக்கு சுமார் இரண்டு கிலோ மீட்டர் இருக்கும். ஒன்றாம் வகுப்பு தொடங்கி ஆறாம் வகுப்பு வரை நண்பர்களுடன், அண்ணனுடன் என்று நடை தான். அதிலும் மழை பெய்து செங்குளம் கன்மாயில் தண்ணீர் நிறைந்து விட்டால் பள்ளிக் கூடத்திற்குக் சுற்றி தான் செல்ல வேண்டும். அது இன்னும் தூரம் அதிகம். இத்தகைய சூழலில் வாழ்ந்த நாம் இன்று நமது குழந்தை களுக்கு பள்ளி வாகனம் மூலம் பள்ளிக்கு அனுப்பது மட்டுமல்ல தன் வீட்டு வாசலிலே வந்து நிற்க வேண்டும், அதுவும் A/C வாகனமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வேறு. பள்ளிக்குச் சென்றால் அங்கும் குழந்தைகளுக்கு AlC அறை. அப்ப அவர்கள் மீது சூரிய ஒளி படுவது எப்போது, உடற்பயிற்சி அறவே கிடையாது. இது அவர்களுக்கு மட்டுமல்ல என் போன்ற தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை செய்யும் நண்பர்களுக்கும் இதை நிலைமை தான்.அதற்காகத் தான் முடிந்த வரை அலுவலகத்திற்கு கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக சைக்கிளில் செல்லுகிறேன். எனது குழந்தையின் பள்ளியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தான் என் வீடு. பள்ளிக்கு என் குழந்தை நடந்து தான் செல்லுகிறார்.எனது பள்ளியின் தேர்வும் A/C இல்லா அறைகள் உள்ள பள்ளி தான். படிப்பும், பணம் சம்பாதிப்பதும் முக்கியம் தான் அதைவிட குழந்தை மற்றும் நம்முடைய ஆரோக்கியம் முக்கியம் என்பதை உணர்ந்து நாம் செயல்படுவோமா?
இயந்திரம் மூலம் அரைத்து பயன்படுத்த முயலுவோம்
நம்மளுடைய இளைமைப் பருவம் தொடங்கி ஒரு குறிப்பிட்ட வயது வரை நாம் இங்கு சென்று கோதுமை, பச்சரிசி, கம்பு, திணை, கேழ்வரகு,மசால் என்று அரைத்த நாம் இன்று பாக்கெட்டில் அடைத்த மாவே வாங்கும் நிலைக்கு ஒவ்வொரு வரும் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. நாம் அரைத்த மாவானது ஒரு மாதத்திற்கு மேல் வைத்திருந்தாலே பூச்சி வைத்து விடும். ஆனால் இன்றோ 6 முதல் 12 மாதம் வரை கெடாது என்று பாக்கெட்டில் அடைத்த மாவுக்கு விளம்பரம் வேற. நண்பர்களே முடிந்த வரை பாக்கெட் மாவு, மாசால்களைத் தவிர்த்து இத்தகைய இயந்திரம் மூலம் அரைத்து பயன்படுத்த முயலுவோம். நம்தலைமுறையே ஆரோக்கிமானதாக மாற்றுவோம். மாற்றம் என்றுமே நம்மில் இருந்து தொடங்கட்டும் அந்த மாற்றம் மற்றவர்களுக்கும் அடித்தளமாகட்டும். மாற்றத்தை முன்னெடுக்க நினைக்கும் அனைத்து நண்பர்களுக்கு மிக்க நன்றி.
மஞ்சப்பை
நம்முடைய சிறு வயதில் இந்த மஞ்சப்பையில் தான் நம்முடைய புத்தகத்தை வைத்து பள்ளிக்கு எடுத்துச் செல்வோம். அது போக கொஞ்சமா காய்கறிகள் வாங்கனும்னாலும் இந்தப் பைதான். காலையில் எழுந்த உடன் வடை, கேசரி, சிந்தாமணி வாங்கச் சென்றாலும் இந்தப்பைதான் கொண்டு செல்வோம். சாம்பாருக்கு தூக்குச் சட்டி தான் பயன்படுத்தினோம்.நாம் பயன்படுத்திய துணிப்பை மண்ணில் எளிதில் மக்கக் கூடியது. சும்மா துவைத்து துவைத்து பல முறை பயன்படுத்தி இருக்கோம். அதே மாதிரி பள்ளிக்கு வாட்டர் பாட்டில் எடுத்துட்டு போனதே இல்லை. பள்ளியில் இருக்கும் தண்ணீர் தான் நம்முடைய தாகத்தை போக்கும். இப்படி வாழ்க்கையில் இருந்த நாம் எவ்வாறு பாலிதீன் பையை உபயோகப் படுத்த ஆரம்பித்தோம் என்று யோசிக்கும் போது என் நினைவுக்கு எட்டியது ஒரு 2004ல் இருந்து இருக்கும்.அது ஈரம் படாது, எடை மற்றும் விலை குறைவு என்று அறிமுகப்படுத்தி, நாம் பயன்படுத்திய துணிப்பையை அழித்தேவிட்டார்கள். இதை விட இப்படிச் சொல்லலாம் நாம் அழித்து விட்டோம் என்பது தான் சரியானது. துணிப்பையை வெளியில தூக்கிப் போட்டால் அது மண்ணுக்கு உரமாகும், பிளாஸ்டிக் பையை வெளியில் தூக்கி ஏறிந்தால் அது நஞ்சாகும் என்பது எல்லோருக்கும் தெரியும் இருந்தும் நாம்மால் முழுவதுமாக மாற முடியவில்லை. வடிவேலு ஒரு படத்தில் குடியை நிருத்த முடியாமல் ஒவ்வொருவரும் ஞாபகப்படுத்துவது போல் இன்று நாம் பாலீத்தின்பை உபயோகப்படுத்துவதை நிருத்த நினைத்தாலும் சுற்றி முற்றி எங்கு சென்றாலும் பாலீத்தின்ல தான் தாராங்க. நம் கண்முன்னை நடக்கும் இத்தகைய கேடுகளை நிருத்தாவிட்டால் பிறகு நம்சந்ததி வருத்தப்படும் போது எதுவும் திரும்பக் கிடைக்காது. ஆகையால் படிப்படியாக பாலீத்தின் பைகளை உபயோகப்படுத்துவதே குறைக்க முயற்சிப்போம்.
நம் காலத்தில் நாம் விளையாடி களைத்து வீட்டுக்கு சாப்பிடும் நேரத்திற்குத் தான் வருவோம்
எங்கள் வீட்டிற்கு மிக அருகில் இருக்கக் கூடிய பூங்காவுக்கு எனது குழந்தைகளை அழைத்துச் சென்ற தருணம். நம் காலத்தில் நாம் விளையாடி களைத்து வீட்டுக்கு சாப்பிடும் நேரத்திற்குத் தான் வருவோம். அதுவும் எவ்வாறு வருவோம் என்றால் வேர்த்து விறுவிறுத்து உடம்பெல்லாம் புழுதியாக, ஆக்ரோஷ பசியுடன்.நேற்று எனது குழந்தைகள் மணலில் விளையாடும் போது நிறைய பேர் அதில் கிருமி இருக்கும் விளையாட விடாதிர்கள் என்று ஏகப்பட்ட அட்வைஸ்.பசங்களோ எதற்கும் செவி சாய்க்காமல் மணலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விளையாடியக் கொண்டிருந்தனர். தினமும் அழைத்துச் செல்ல விருப்பம்தான் அலுவக வேலையின் காரணமாக சனி மற்றும் ஞாயிற்று கிழமையில் தான் நம்மாள அழைத்துச் செல்ல முடிகிறது. சென்னை போன்ற பெருநகரத்தில் முக்கால்வாசி CBSE தனியார் பள்ளிகள் A/C அறைகளைப் போட்டு, குழந்தைகள் விளையாடுவதும், படிப்பதும், உண்ணுவதும் என்று எல்லாமே அந்த AlC அறைக்குள் தான். போதிய விளையாட்டு மைதானமும் இருப்பதில்லை. அவர்களின் வாழ்க்கையை இன்றைய பெற்றோர்களாகிய நாம் ஒரு பிராய்லர் கோழி போல படிப்புதான் வாழ்க்கை என்று அடைத்து வாழும் நிலையைக் காணும் போது நகரத்து வாழ்க்கை நரகம் தான் என்று தோன்றுகிறது. நாட்டுக் கோழிகளாய் சுந்திரமாய் சுற்றி, உண்டு நல்ல காற்றைச் சுவாசித்து இருந்த நாமே நம் குழந்தைகளை படுபாதாள குழியில் தள்ளும் ஒரு அவல நிலையில் தான் நாம் இருக்கிறோம் எனும் போது மிக்க வருத்தமே. குழந்தைகளுக்கான படிப்பதற்கான பள்ளித் தேர்வின் போது இன்றைய பெற்றோர்களாகிய நாம் படிப்பு என்ற ஒன்றை மட்டும் குறிக்கோளாகப் பார்காமல், விளையாட்டு, சுத்தமான திறந்த வெளிக் காற்று என்றுநம் கவனைத்தையும் அதில் செலுத்தி நல்ல ஆரோக்கியமான படிப்பை தர முன்வர வேண்டும்.அத்தகைய ஆரோக்கியமான கல்வியை நம் குழந்தைகளுக்குத் தர முயற்சி செய்யலாமா?
இந்தியர்கள் சேமிப்பில் சிறந்து இருப்பதற்குக் காரணம்
நம் இந்தியர்கள் சேமிப்பில் சிறந்து இருப்பதற்குக் காரணம் நம் சிறுவயதில் பள்ளிக்குச் செல்லும் போது நம்முடைய பெற்றோர்கள் நமக்குத் தரும் பாக்கெட் மணியை நாம் எப்படி கையாள்வது என்பது முதல் அதில் ஒரு பகுதியை சேமிக்கச் சொல்லித் தரும் அன்னையின் பங்கு வரை அற்புதம்.கையில் பணம் இருந்தால் நாம் பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றுக்கும் செலவு செய்வோம். இன்று நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது பள்ளியில் பயிலும் மாணவருக்கு பள்ளி நிர்வகமே Snacks கொடுத்து விடுகிறார்கள். நாம் பணம் கொடுத்து விடத் தேவையில்லை. அவர்களுக்கு நிதி மேலாண்மையும் தெரிய வாய்ப்பு இல்லை. அது போக ATMம் கார்டு வந்த பிறகு தாருமாற சுவாப் பண்ணுறோம். கையில் பணம் இருந்து செலவு பண்ணும் போது பார்த்துப் பார்த்துப் செலவு செய்தோம். இன்று அப்படியா ? சிக்கனத்தில் சிறந்தவர்கள் இந்தியர்கள் என்ற நிலை மாறி சிக்கலில் தவிக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம் என்பதை உண்மை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)