வரும் மே நான்காம் தேதியோடு என்னுடைய அலுவலகத்தில் 12 டாவது வருடத்தை நிறையு செய்யவுள்ளேன். கல்லூரி முடித்து இரண்டு வருட போராட்டங்களுக்குப் பிறகு சேர்ந்த முதல் கம்பெனி. அப்போது நான் இந்த அலுவலகத்தில் நான்காவது ஊழியன். முதல் மூன்று வருடங்கள் எனக்கு மாபெரும் சவால் நிறைந்ததாக இருந்தது. அதிலும் குறிப்பாக ஆங்கிலப் புலமை, டைப் ரெட்டிங், unix, Linx, perl script,கணினியை உபயோகப் படுத்தும் வேகம் இவை அனைத்திலுமே ஆமை வேகம் தான். இவை அனைத்திலுமை கற்றுக் கொள்ள புத்தகம் மற்றும் பயிற்ச்சி வகுப்புகளை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. ஒரு சிற்ப்பி சிலையைச் செதுக்குவது போல் என்னை ஒரு சிறந்த வேலைக்காரனாக எனது கம்பெனி செதுக்கியது என்றால் மிகையாகாது. அதிலும் குறிப்பாக முத்து, சக்தி, ராஜசேகர், வினோத், வெங்கட், கோபால், ஆனந்தா, K.N. ராஜேஷ்,Hemi, Satish anand, Neel, Ann என்று பட்டியல் நீளும். ஒவ்வொரு வரும் எனக்கு பல்வேறு வகையில் என்னுடைய முன்னேற்றத்திற்கு உதவியவர்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வெறும் ஐம்பது உழியர்களோடு இருந்த எங்கள் கம்பெனியை இரு வேறு நிறுவனங்கள் கையகப்படுத்தி உலகம் முழுவதும் 8000 உழியர்களுக்கு மேலான smsc & MicrochiP நிறுவனத்துடன் இணைந்து ஆறு வருடங்களுக்கு மேல் இருக்கும். மீண்டும் ஒருமுறை என்னை செதுக்கிய சிற்ப்பிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் காசி ..
பதிலளிநீக்கு