இந்தப் புகைப்படத்தை என்னால் மறக்க முடியாது. என் குழந்தை பள்ளி விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற்று ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்று நம்மால் பரிசு வாங்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த போது,பெற்றோர்களுக்கான போட்டி ஒன்றை பள்ளி நிர்வாகம் அறிவித்தது அது என்ன என்றால் குழந்தையை பெற்றோர் கழுத்தில் வைத்துக் கொண்டு 100 மீட்டர் ஓட வேண்டும். அந்தப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு என் குழந்தையிடம் நான்சொன்னேன் நீ வருத்தப் படாதே நிச்சயம் உன் தந்தை இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று உனக்கு பரிசு பெற்றுத் தருகிறேன் என்று. சொன்னவுடன் வந்ததே என் குழந்தையின் முகத்தில் மலர்ச்சி. அந்த முகமலர்ச்சிக்காக ஓடிய ஓட்டம், இன்றும் என் கண்களில் நிழலாடுகிறது. அந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து அதற்கான பரிசை குழந்தையோடு சென்று வாங்கிய போது என் குழந்தை பெற்ற மகிழ்ச்சியை சொல்ல வார்த்தையில்லை.
Hi kasi, iam uma.இந்த விளையாட்டுநிகழ்ச்சியை பற்றி படித்தவுடன் எனக்கு மெய்சிலுர்தது kasi.ஒவ்வொரு பகுதியையும் படித்தேன். அருமை kasi.
பதிலளிநீக்குமிக்க நன்றி உமா.
நீக்குSema Mass... Kasi ..
பதிலளிநீக்கு