இந்த தபால் பெட்டிகள் தான் அன்று நமது வாழ்வின் நிகழ்வுகளான மகிழ்ச்சி, சோகம், நம்முடைய பிரச்சனை,வேலை, பிறந்த நாள் வாழ்த்து மடல், திருமணம் என்று பலரது நிகழ்வுகளையும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தகவல்களை கொண்டு சென்றதில் தபால் பெட்டியின் பங்கு அற்புதம். இது எல்லாம் ஒரு பத்து பதினைந்து வருடத்திற்கு முந்தைய நிலை. என்று மொபைல் பொதுமக்கள் மத்தியில் புழக்கத்திற்கு வந்ததோ அப்போதே தபால் எழுதுவது குறைந்தது . நினைத்த நேரத்தில் பல ஆயிரம் தூரத்தில் உள்ளவர்களுடன் பேச வாய்ப்பு வந்தது. கேமரா மூலம் முகம் பார்த்து பேசும் வசதி, இணையம் மூலம் விண்ணப்பத்தல், எழுதுதல், படங்களை அனுப்பிப் பெருதல் என்று ஒரே அடியாக இந்த தபால் பெட்டி வீழ்ந்து விட்டது. என்ன தான் இதன் பயன்பாடு வீழ்ந்து விட்டாலும், இதைப் பயன்படுத்தி மகிழ்ந்த அந்த நாட்கள் நம் மனதை விட்டு அகலவில்லை என்பதை உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக