தீப்பெட்டித் தொழிற்சாலைக்குத் தேவையான குச்சியை இத்தகைய கட்டையில் அடிக்கித் தருவதற்கு நான் சிறுவயதாக இருக்கும் போது ஒரு ரூபாய் இதை எனது அம்மா மட்டுமல்ல சிவகாசி, திருவில்லிபுத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை போன்ற பகுதியில் உள்ள நடுத்தரக் குடும்பத்திரைின் பிரதான தொழில் இதுவாகத்தான் இருக்கும். அங்கு வானம் பார்த்த பூமி மழை பெய்தால் தான் விவசாயம் இல்லை என்றால் அவர்களின் கஷ்டத்தை போக்கும் தொழில் இதுதான் என்றால் மிகையாகாது. ஒரு நாளைக்கு 50 முதல் நூறு குச்சி கட்டைகளை அடுக்கி அதை வைத்து குடும்பம் நடத்தும் தாய்மார்கள் இங்கு அதிகம். அத்தகைய கஷ்டப்பட்டு தன் குழந்தைகளைப் படிக்க வைப்பதால் தான் என்னவோ தாயின் கஷ்டத்தை உணர்ந்து படிக்கும் விருதுநகர் மாவட்ட மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் எப்பொழுதுமே முதல் இடத்தில் இருக்கிறது போல?
மறுக்க முடியாத உண்மை ...
பதிலளிநீக்கு