செவ்வாய், 22 ஜனவரி, 2019

என்னுடைய அம்மா

இந்த உலகத்தில் எத்தனையோ உறவுகள் எல்லோருக்கும் இருந்தாலும், நேசிக்கப்பட்டாலும் அதில் ஏதோ ஒரு ஆதாயம் நேசிப்பவருக்கும் நேசிக்கின்ற வருக்கும் இயற்கையாக இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த உலகத்தில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாய் இருப்பது தாய் காட்டும் அன்பு. இவங்க தான் என்னுடைய அம்மா. அவங்க எனக்காகப் பட்ட துன்பங்களையும், ஏற்றுக் கொண்ட தியாகமும் என் கண்களில் நிழலாடுது. தனக்கென்று எதுவும் சேர்க்காத என் தாய் என் தந்தை தரும் தொகையில் எங்கள் குடும்பத்தைக் கவனித்து அதில் சேமிக்கும் சிறு தொகையை நான் கேட்டு அடம் பிடிக்கும் பொருளுக்காக செலவளிப்பாங்க எங்கள் வீட்டின் பொருளாதார மேதை. அப்போது கேட்ட பொருள் கிடைத்த மகிழ்ச்சி தான் எனக்கு இருந்ததே தவிர என் தாயின் உள்ளார்ந்த அன்பு விளங்கவில்லை. தென்மேற்க்குப் பருவ மழை கோரத் தாண்டவமாடும் மழை காலங்களில் என் தாயோடு பயனித்திருக்கிறேன். மழையில் தன் மகன் நனைந்து விடக் கூடாது என்று தான் பேரர்த்தியிருக்கும் முக்காட்டை எனக்குப் போர்த்தி, தனது குஞ்சுகளை அடைகாக்கும் கோழியைப் போல என்னைக் காத்து நின்று எனக்கு வர வேண்டிய ஜீரத்தையும், ஜலதோஷத்தையும் தாய் ஏற்றுக் கொண்டு அவதிப்படுவாங்க. கல்லூரிப் பருவத்தை முடித்து வேலைக்காக வெளியூர் வரும் போது தான் தாயின் அருமை எனக்குப் புரிய ஆரம்பித்த முதல்படி. அதிலும் குறிப்பாக அம்மா சமையல் மாதிரி வருமா? என்ற புலம்பல் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு எங்களுக்கு குழந்தை பிறந்த பின்பு தான் முழுமையாக எனக்குத் தாயின் அருமை தெரியுது. ஒவ்வொரு வருக்கும் ஜனனம் என்பது ஒரு முறைதான் ஆனால் எனக்கு இருமுறை. நான் நிச்சல் பழக என் அன்னை என் இடுப்பில் சேலையைக் கட்டி கிணற்றில் நிந்தும் போது தவறி விழுந்து விட்டேன். என் தாய் தனி ஆளாகப் போராடி என்னைக் காப்பாற்றினார். இயந்திரமையமான வாழ்க்கையில் இன்னும் மிச்சமிருப்பது தாய்ப்பாசம் மட்டும் தான் போல.

1 கருத்து: