நான் சிறு வயதாக இருக்கும் போது சுமார் 300க்கும் மேற்பட்ட வீடு இருக்கக் கூடிய செங்குளம் எனும் கிராமத்தில் தான் வாசித்தோம். அங்கு விஜய குமார் என்கிற அண்ணா வீட்டில் தான் முதல் டிவி, அதுவும் கலர் டிவி வாங்கினார்கள். மொத்த ஊர் ஜமைும் ஞாயிறு, வெள்ளி ஆனால் போதும் கூ ட்டம் சும்மா அலைமோதும், இது போக ஊரில் யாருக்காவது காது குத்து, கல்யாணம் வீட்டு விஷசம் என்று எதுவாக இருந்தாலும் அவர் டிவியில் தான் வீடியோ கேசட் வாங்கி ஒளிபரப்புவார்கள். எங்கள் வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் நடந்து தான் அவர் வீட்டுக்குச் சென்று பார்போம். ஆனால் எனது அம்மாவோ, அப்பாவோ ஒரு முறை கூட அங்கு வந்து பார்த்தது இல்லை. அதில் அவர்கள் ஆர்வம் காட்டியதும் இல்லை. இத்தகைய சூழ்நிலையே கேள்விப்பட்ட என் தாத்தா என் பேரன்மார்கள் இவ்வளவு தூரம் சிரமம் பட்டு டிவி பார்கக் செல்லுவதா என்று கஷ்டப்பட்டு சேர்த்து வைத்து எங்களுக்காக கருப்பு வெள்ளை BPட டிவியை வாங்கித் தந்தார். அதுதான் எங்கள் கிராமத்தின் இரண்டாவது டிவி.நாங்கள் வாங்கி மூன்று வருடத்தில் பஞ்சாயத்து டிவி என்று படிப்படியாக வளர்ந்து இன்று டிவி இல்லாத வீட்டைப் பார்பது அரிது என்ற நிலைக்கு வந்ததை எண்ணி மகிழ்வதா?. அன்று விளையாடி போரடித்தால் டிவி பார்த்த காலம் போய் இன்று டிவி பார்த்து போரடித்தால் விளையாடும் காலத்திற்கு வந்ததை எண்ணி சிரிப்பதா?
அருமை ...
பதிலளிநீக்கு