செவ்வாய், 22 ஜனவரி, 2019

எனக்கு மிகவும் பிடித்த நண்பர் - லோகேஷ்

எனக்கு மிகவும் பிடித்த நண்பர்களுள் ஒருவர் லோகேஷ். கல்லூரி படிக்கின்ற காலங்கள் தொடங்கி இன்று வரை தொடர்பில் இருக்கும் நண்பர்களில் இவரும் ஒருவர்.இவர் பள்ளிப் பருவம் ஆங்கில வழிக்கல்வியில் படித்தாலும் இவரின் தமிழ் ஆர்வம் அருமை. இவரின் சிறப்பு எதுகை,மோனை பேச்சு & எழுத்து. இவரின் facebookக்கின் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கும். உலக நடப்புகள் தொடங்கி பொருளாதாரம் அரசியல் என்று இவரின் வாதம் அனல் பறக்கும். நண்பர்களே நேரம் கிடைத்தால் இவரின் பதிவுகளைப் படிக்கவும்.நார்வேயில் இருந்து எப்ப இந்தியா வந்தாலும் என்னைச் சந்திக்காமல் அவர் செல்லமாட்டார். எவ்வளவு பெரிய உயரத்திற்குச் சென்றாலும் நண்பர் பழமையை ஞாபகம் வைத்து தொடர்பு கொள்ளும் பண்பு அற்புதம். அந்தப் பண்பிற்க்கு இந்த காசி தலைவணக்குகிறேன்.

1 கருத்து: