செவ்வாய், 22 ஜனவரி, 2019

எனக்கு பிடித்த அண்ணன் - ஜோதி

நாம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவரை வரலாற்றுப் புத்தகத்தில் படித்திருப்போம். நான் நேரில் பார்த்த ஒரு சிலரில் நமது ஜோதி அண்ணனும் ஒருவர்.பள்ளிப் பருவத்தில் படிக்கும் போது அவரின் வீடு மிக மிகச் சிறியது அவர் முக்கால் வாசி நாட்கள் கோயில்விலும் பள்ளிக்கூடத்திலும் தான் படிப்பதும் / தூங்குவதும். நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரியில் படிக்க வசதியில்லாமல் ஸ்பான்சர்ஸ் மூலமாகத்தான் படித்தார். கல்லூரி படித்து முடித்து TCS ல் 2003ல் சேர்ந்து இன்று வரை ஒரே கம்பெனியில் சுமார் 15 வருடங்களை நிறைவு செய்யப் போகிறார். அவர் ஒரு கடின உழைப்பாளி மட்டுமல்ல மற்றவருக்கு உதவும் பண்பு அற்புதம். தன்னுடைய கஷ்டம் வேற யாருக்கும் வரக்கூடாது என்று எளியவருக்கு வழியச் சென்று உதவி புரியும் பண்பு இவரின் சிறப்பு. என்னுடைய கல்யாணத்திற்கு அண்ணனுக்கு பத்திரிக்கை கொடுக்க முடியவில்லை.அண்ணன் அப்போது வெளிநாட்டில் இருந்தார். தற்சமையமாக இந்தியா வந்த போது என்னுடை திருமணத்தை நண்பர் வாயிலாகத் தெரிந்து கொண்டு எங்களை வாழ்த்த வந்த குணம் அற்புதம். இன்று சென்னையில் ஒரு வீடு மற்றும் திருவில்லிபுத்தூரில் இரண்டு வீடு என்று உழைப்பால் வாங்கி உயர்ந்த அண்ணனை வாழ்த்துவதில் நான் பெருமை அடைகிறேன்.

1 கருத்து:

  1. வாழ்த்துக்கள் ஜோதி... அருமையான பதிவு காசி வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு