சுமார் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை கிராமத்தின் வீதிகளில் சிறுவர்களும், சிறுமியர்களும் கூட்டம் கூட்டமாய் கூடி விளையாடுவாங்க. இன்றோ தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்பு மற்றும் கல்வியில் போட்டி என்கின்ற பெயரில் சும்மா வீட்டுப் பாடத்தை திணித்து விளையாட்டு என்பதே குழந்தைங்க மறந்துட்டாங்க. ஓடி ஆடி வீதியில் குழுவாக விளையாடியதை இனி கதைல மட்டும் தான் படிக்கனும் போல. மறந்து கொண்டிருக்கும் கிராமத்து விளையாட்டுக்கள் கபடி, சிலம்பாட்டம், பம்பரம், கோழிக் குண்டு, கிட்டி, திருடன் போலீஸ், பல்லாங்குழி,தாயம், கும்மி, பாண்டி, கண்ணா மூச்சி, குலைகுலையா முந்திரிக்காய் , கொழுக்கட்டை, நொண்டி இவை அனைத்தும் சிறுவர் & சிறுமியரின் விளையாட்டு. நம்முடைய இளமைக் காலம் முழுவதும் விளையாடித் திரிந்ததால்தான் நமக்கு இன்று வரை வாழ்க்கை விளையாட்டாய் இருக்கிறது. இன்று உள்ளசிறுவர்களின் உலகத்தை இப்பொழுது கார்டூன் சேனல்களும், வீடியோ விளையாட்டும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது என்பது வேதனைப் பட வேண்டிய விஷயம். இன்றைய பெற்றோர்களாகிய நாம் இத்தகைய ஆக்கிரமிப்புக்களை சிறுவர்களிடம் இருந்து அகற்றி விளையாட்டுக்களிலும் ஆர்வத்தை ஏற்படுத்த முனைவோம். முடிந்த வரை முயன்று வெல்வோம். உங்கள் முயற்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக