இவர் தான் எங்கள் பள்ளியின் வேதியியல் ஆசிரியர்சக்திவேல். இவரின் சிறப்பே எந்த வித குறிப்பும் இல்லாமல் பாடம் நடத்துவது தான். நடத்துவதற்கு இடை இடையே கேள்விகள் பலவற்றைக் கேட்டு மாணவர்களை எப்பொழுதுமே தன் கண்பார்வையிலே வைத்திருப்பவர். இவர் நடத்தும் பாடத்தைக் கவனித்து புத்தகத்தை ஒரு முறை படித்தாலே போதும் அப்படியே நம் மனதில் பதிந்து விடும், அவ்வளவு பெரிய திறமையாளர். படிக்கவில்லை என்றால் பின்னிப் பிடலேடுத்து விடுவார். வேதியியல் ஆய்வுக் கூடத்தில் இவரின் பங்களிப்பு அற்புதம். இன்று எனது நண்பர்களில் பலர் மருந்து தாயாரிக்கும் கம்பெனியான பயோகான், பெர்ஜர் பெயிண்ட் என்று வேதியில் துறையில் சிறந்து விளங்க அடித்தளம் இட்டவர் இவர்தான் என்றால் மிகையாகாது. அவரின் கல்விப் பணி அற்புதம், இப்பணி இன்னும் மென் மேலும் தொடரட்டும்.,.....,
வாழ்த்துக்கள் ...
பதிலளிநீக்கு