செவ்வாய், 22 ஜனவரி, 2019

தனது 72 வது வயதில் 5 கிலோ மீட்டருக்கான சும்மத்தானில் கலந்து கொண்டு அதை முடித்து பரிசும் பெற்று விட்டார்

இவர் பெயர் கோவிந்தராஜ். இவரை சுமார் ஐந்து வருடத்திற்கு முன்பு வேளச்சேரி Aquatic Complex ல் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கச் செல்லும் போது அவருடன் பழக எனக்கு வாய்புக் கிட்டியது. நல்ல மனிதர். நீச்சல் அடிக்கும் போது நாம் செய்யும் தவறுகளை தானாகவே வந்து அறிவுரை கூறி திருத்தச் செய்பவர். அவரைப் பார்த்து மூன்று வருடத்திற்கும் மேலாக இருக்கும். 26.8.2018ல் நடைபெற்ற சும்மத் தான்போட்டியில் அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அது ஒரு சாதாரண சந்திப்பு இல்லை, தனது 72 வது வயதில் 5 கிலோ மீட்டருக்கான சும்மத்தானில் கலந்து கொண்டு அதை முடித்து பரிசும் பெற்று விட்டார் என்ற செய்தியோடு சந்தித்தேன். மிக்க மகிழ்சியான தருணம். சாதனை புரிவதற்கு வயது ஏது? என்பதற்கு நான் பார்த்த சிலரில் இவரும் ஒருவர். எங்களைப் போன்றவருக்குஇவர் ஒரு சிறந்த வழிகாட்டி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து பல மெடல்களைப் பெற்று எங்களை ஊக்குவித்துக் கொண்டே இருங்கள் ஐயா.

1 கருத்து: