எங்கள் திருவில்லிபுத்தூரில் உள்ள வீட்டில்,வீடு கட்டிய அளவிற்கு மேலாக
இடம் விட்டு அந்த இடத்தில் தென்னை,தேக்கு, வேம்பு,அசோக மரம்,முருங்கை,
வாழை, செம்பருத்தி, அவரைக்காய், சுரக்காய், கத்தரிக்காய், தக்காளி, கீரை
வகைகள் என்று நானும், எனது அண்ணனும் போட்டி போட்டு செடியை வளர்ப்போம்.
அதுவும் தூங்கி எழுந்ததும் முதல் வேலையாக அந்தச் செடி எப்படி இருக்கு,
எவ்வாரு வளர்ந்திருக்கு என்று பார்க்க போயிடுவோம். அதற்குத் தண்ணீர்
ஊற்றுவது, களையெடுப்பது என்று ஆர்வமுடன் வேலை செய்வோம். குளிக்கின்ற தண்ணிர்,
பாத்திரம் விளக்கும் தண்ணீர், துணிக்குச் சோப்பு போடும் தண்ணீர் என்று
வரும் கழிவு நீரை வாய்க்கால் அமைத்து ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பாத்திய
பிரிச்சு விடுவது. எங்கள் ஊரில் எங்கள் வீட்டில் தான் கருவேப்பிலை மரம்
இருக்கும் அதைப் பறிப்பதற்கு எங்க வீட்டைச் சுற்றி இருப்பவர்கள்
வருவார்கள்.எங்க விட்டுல முப்பது முதல் நாட்பது கோழி எப்பவுமே இருக்கும்.
அத்தகைய இயற்கைச் சூழலில் வாழ்ந்த நாம் இன்று சென்னை போன்ற பெரு நகரத்தில்
வாழும் வாழ்க்கை நம் தலைமுறைக்கு இயற்கையோடு ஒன்றினைந்து வாழும் வாழ்க்கை
முறை, விவசாயம் ஆகியவற்றை பல அடுக்கு மாடிக் கட்டிடத்தில் நாம் தங்குவதன்
மூலம் சிதைத்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு நாம் பல
அடுக்குமாடிக் கட்டிடத்தை வாங்குவதற்குப் பதிலாக இடம் வாங்கி
அதில் வீடு கட்டுவதன் மூலம் நம் குழந்தைகளுக்கு நாம் கற்ற இயற்கைக்யோடு
ஒன்றிணைந்த வாழ்க்கையை அவர்களுக்குக் கற்றுத் தரலாம். அவ்வாறான இடத்தை வாங்கி வீடு கட்டுவோமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக