செவ்வாய், 22 ஜனவரி, 2019

என்னுடைய அப்பா

இவர் தான் என்னுடைய அப்பா. மிக எளிமையானவர். கடின உழைப்பாளி. தன்னுடைய வேலையில் ஒவ்வொரு வருடமும் அலுவலக நாள் விடுமுறை தவிர்த்து 100% வருகைக்காக பல பரிசு களை வாங்கியுள்ளார். அவரிடம் புகைப் பழக்கம் மற்றும் மது அறவே கிடையாது. அவரின் அலுவலகத்திற்கு நாள் ஒன்றுக்கு 20 கிலோ மீட்டருக்கும் மேலாக சைக்கிளில் சென்று வருவார். அவர் எலக்ட்ரிஷன் என்பதால் அலுவலக நேரம் தவிர்த்து எங்கள் கிராமத்திலும் சரி திருவில்லிபுத்தூரிலும் சரி நிறையப் பேர் டீயுப் லைட், மிக்ஸி, கிரைண்டர், வயரிங் என்று ஏதாவது பழுதடைந்தாலோ இல்லை பிளம்பிங் என எந்த வேலையாக இருந்தாலும் இவரைத்தான் கூப்பிடுவார்கள். வேலைக்கான காசு மிக மிகக் குறைவாக வாங்குவார். இதனால் பல முறை என் அம்மாவிடம் திட்டு வாங்கி இருக்கிறார். இருந்தாலும் அவர் அந்த விஷயத்தில் மாறியதில்லை. என்னுடைய ரெங் கார்டில் கையெழுத்து வாங்க அவரிடம் கூடுக்கும் போது அவர் முதலில் பார்ப்பது வருகை விழுக்காடு 100% டா . ஒழுக்கத்தில் நன்றா என்பது தான். அதன் பிறகு தான் மார்க். அவரிடம் கேட்டால் இந்த இரண்டும் நன்றாக இருந்தால் படிப்புத் தானாக வரும் என்பார். என்னுடைப பள்ளி மற்றும் கல்லூரியில் 100% வருகைக்காக பல முறை சர்டிபிக்கட் வாங்கியதில் நான் தான் முதன்மை மாணவனாக இருப்பேன். இப்பத் தெரிகிறாத நண்பா நான் ஏன் இன்னும் எளிமையான வாழ்க்கை வாழுகிறேன் என்று.எல்லாம் நான் என் தந்தையைப் பார்த்து கற்று, அவரின் பயிற்ச்சியில் வளர்ந்ததால் தான்.இத்தகைய குணத்திற்காக என்னை பல நண்பர்கள் புகழ்ந்தது உண்டு. அந்தப் புகழ் கிடைக்க காரணம் என் தந்தை தான். கல்லூரி காலத்திலே 100% வருகையை பதிவு செய்வது அரிது. அதையும் செய்ய வைத்தவர்.இதோ  ...

1 கருத்து:

  1. மனிதர்களை மதிக்கும் பண்பு மட்டுமே மிக உயர்ந்தது. யாராக இருந்தாலும் அவருக்கு மதிப்புதரும் நடத்தையே உயர்ந்தது.அருமை காசி...

    பதிலளிநீக்கு