என்னுடைய பள்ளி காலம் தொடங்கி இன்று வரை நட்பு வட்டாரத்தில் இருக்கும்
நண்பர்களுள் இவரும் ஒருவர் நண்பர் பெயர் வேல்முருகன். என்னுடைய பள்ளி
காலத்தில் இவர்தான் எனக்கு ஆங்கிலக் குரு. பல முறை ஆங்கில ஆசிரியரிடம்
திட்டு வாங்கியதைப் பார்த்த நண்பர் தாமாக மனம் விரும்பி எனக்குச் சொல்லிக்
கொடுத்தவர். ஒரு முறை ஒரு பாராப் கிராப் எஸ்சை எழுதவில்லை என்று எனக்கு
ஆங்கில ஆசிரியரிடம் இருந்து மகா திட்டு. நான் என் இடத்திற்கு வரவும்
எனக்குச் சொல்லிக் கொடுத்து அடுத்த 15 நிமிடத்தில் என்னை எழுத தயார் படுத்தி
விட்டார். நான் ஆங்கில ஆசிரியரிடம் சென்று எழுதுகிறேன் என்றேன். அதற்கு
அந்த ஆங்கில ஆசிரியர் ஒரு நாள் முழுவதும் படிக்க நேரம் கொடுத்து எழுதாததை
எப்படி எழுதுவ என்று கேட்டார்கள். எழுதி ஆங்கில ஆசிரியரின் பாராட்டைப்
பெற்றேன். இவர் என்னுடன் கல்லூரி காலத்திலும் பயின்ற நண்பர். என்னுடை
வகுப்பில் ஒரு நான்கு பேர் தான் தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவர்கள்
இருப்பார்கள். முதல் மூன்று நாட்களிலே எனக்குள் தாழ்வு மனப்பான்மை அதிகமாகி
மன உளச்சலில் இருந்த போது எனக்கான தைரியத்தைக் கொடுத்து அந்த மன
உளச்சலில் இருந்து விடுபட்டு கல்லூரி முடிக்கும் போது 82.2% யோட வெளிவர
வைத்த பெருமை இவரையும் சக்கரையுமே சாரும். கேட்காமல் எத்தனையோ
நண்பர்களுக்கு உதவி புரிந்துள்ளார். என்னுடன் பயின்ற பள்ளி நண்பர்களுக்கு
அவர் அப்பா மூலம் பணமும், பொருள் உதவியும் பெற்றுத் தந்தவர். இன்ஜினிரிங்
கலந்தாய்விற்கு 5000 ரூபாய்க்கு காசோலை எடுக்க முடியாத எங்கள் பள்ளி
நண்பர்களுக்கு அப்பொழுதே அவர் அப்பாவிடம் பேசி நான்கு நண்பருக்கு
உதவியவர். எத்தனையோ என்னுடைய பள்ளி நண்பர்கள் வெளிநாட்டுக்குச் சென்றாலும்
நண்பர் தான் யாரும் கேட்காமலே ipod வாங்கிக் கூடுத்தவர். இன்றும் பல
நண்பர்களுக்கும், தம்பிமார்களுக்கும் பண உதவி, பொருள் உதவி என்று கொடுத்து
உதவும் மாண்புள்ள நல்ல நண்பனைப் பெற்றது எனக்கு மிக்க மகிழ்ச்சியே.
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குTrue kasi.
பதிலளிநீக்குநன்றி கங்கா அவர்களே ....
நீக்குLucky to have friend like him..
பதிலளிநீக்கு