எவ்வளவு அடி, திட்டு நாம் வாங்கினாலும் பள்ளிப் பருவம் தான் ஒவ்வொருவருக்கும் சிறந்த பருவம். பலர் நினைத்துப் பார்பதில்லை. அதை நாம் நினைத்துப் பார்த்தால் பல வசதிகள் இருக்கும் இந்தக் காலத்தை விட நம்முடைய இளமை காலம் சிறந்ததாக இருக்கும். அப்ப நாங்க செங்குளம் எனும் கிராமத்தில் வாடகை வீட்டுல இருந்தோம். சுற்றியும் எங்களைப் போல் பலர். விளையாடுவதற்கும், பேசுவதற்கும் நம் வயதிற்கு ஏற்றார் போல் நண்பர்களுடன் கூட்டம் கூட்டமாக திரிவோம். அப்ப எல்லாம் எங்க வீட்டுல மண்ணெண்ணெய் அடுப்பு தான். அந்த அடுப்பை வைத்தே பல உணவுகளை செய்து தருவாங்க எங்க அம்மா. இன்று எத்தனை பேர் அதைப் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அப்ப எல்லாம் ரேசன் கடையில மிகப் பெரிய வரிசையில் நின்று மண்ணெண்ணெய் வாங்கிட்டு வருவாங்க. அப்ப விளக்குக் கூட ஒரு கண்ணாடி பாட்டிலில் மூடியில் திரியை சொருகி மண்ணெண்ணெய் மூலம்தான் எரியும். அதிலும் கரண்ட் கட் ஆச்சுன்னா எங்களைப் போன்ற பசங்களுக்கு அப்போதான் தீபாவளி. எல்லோரும் வெளியில் வந்து பேசுவாங்க, புத்தகத்தை எடுத்து வைச்சுட்டு நாங்களும் நிம்மதியாகிடுவோம். அது இருளில் வெளிச்சத்தைக் கண்ட அருமையான காலம். அவை அனைத்தும் நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கு. பலருக்கு அப்போ அவ்வளவு வசதி வாய்ப்புக்கள் இல்லை. ஆனா நாம் கலகலவென்று சிரித்து மகிழ்ந்து இருந்தோம்.என்ன பள்ளிக்குப் போகும் போது தான் கொஞ்சம் சினுங்கிகிட்டு போவோம். அதுவும் பண்டிகை வந்துச்சுன்னா வீட்டுல முருக்கு, அதிரசம், சுஸ்சியம், சீடை என்று அம்மாக்கள் கும்பல் கும்பலாக கூடிச் சேர்ந்து செய்து பக்கத்து வீட்டிற்கும் கொடுத்து மகிழ்வோம். இன்றோ கடனமக்குன்னு இனிப்புகளை கடையில வாங்கி பக்கத்து வீட்டுக்குத் தாராங்க. அப்ப இருந்த பண்டிகை கொண்டாட்டத்திற்கும், இப்ப நாம கொண்டாடுகிற முறைக்கும் நிறைய வித்தியாசம் தெரியுது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக