நம்முளுடைய சிறு வயதில் பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடியதை மறக்க முடியாது. சுதந்திர தினத்திற்கு முந்தின நாளே சொல்லிருவாங்க அடுத்த நாள் கட்டாயம் காலை 8.00 மணிக்கு சுதந்திர தினத்திற்கு வந்து விட வேண்டுமென்று .. வரவில்லை என்றால் அவர்களை தனியாக கவனிப்பேன் என்று மிரட்டல் வேறு இருக்கும். அத்தகைய மிரட்டல் இல்லை யேன்றால் யாரும் வரமாட்டார்கள். இப்படிச் சொல்லித்தான் இப்படிப்பட்ட தேசபற்று விழாக்களை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு அன்று ஆளாக்கப்பட்டு படிப்படியாக இத்தகைய நாட்டுப்பற்று திணிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் நாமே விருப்பத்துடன் இத்தகைய நிகழ்சியில் கலந்து கொண்ட நாள் மறக்க முடியாதவை. நமது பள்ளியில் கொடியேற்றியதைத் தொடந்து தரும் அந்த ஆரஞ்சு மிட்டாய், ஆசை சாக்லைட்,சட்டையில் தேசியக் கொடியைக் குத்திக் கொண்டு திரியும் போது நமக்கு தனி கர்வம் பிறக்குமே அதை மறக்கவே முடியாது. அதன் பிறகு நடக்கும் கலை நிகழ்ச்சியை மறக்க முடியாது. நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்குச் சென்றால் டிவியில் தலைநகரில் நடக்கும் அணிவகுப்புக்கு ஜனாதிபதி தலைமை தாங்கிய நிகழ்வு போயிக் கொண்டிருக்கும் அதைப் பார்காதவர் ஒருவர் கூட இருக்க முடியாது.அப்படி ஒரு நேர்த்தி இருக்கும். ஒன்றே ஒன்று இந்தநாளில்... இந்த நாடு நமக்கு என்ன செய்தது என்ற கேள்விகளை கேட்பதை தவிர்த்து இந்த நாட்டிற்கு நாம் என்ன செய்தோம் என்று நினைப்போம். இரண்டு தலைமுறைக்கும் முன்னர், எல்லோரும் என்னென்ன கஷ்டங்கள் பட்டோம் என்று நாம் கொஞ்சம் சிந்திப்போம்.இந்த சுதந்திரம் நமக்குச் சும்மா வரவில்லை. எத்தனையோ இந்தியர்களின் கல்லறையில் தான் நமக்கு இந்த சுதந்திரம் எனும் பூ மலர்ந்திருக்கிறது என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம். தேசப்பற்று மட்டும் நமக்கு இருந்தால் போதுமா? நாடு முன்னேற நாமும் நம்மாள் முயன்றத செய்யலாம் .நம்முடைய குழந்தைகளுக்கும் சுதந்திரதின சிறப்பை எடுத்துச் சொல்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக