என்னுடன் கல்லூரியில் பயின்ற கிரியின் அப்பா தான்இவர், கல்லூரியில் பயின்ற முக்கால் வாசி நாட்கள் இவரின் வீட்டில் தான் படிப்பு, அரட்டை, சாப்பாடு மற்றும் தூக்கம். எப்பொழுதும் பத்து முதல் பதினேந்து நண்பர்கள் இருப்போம். அதுவும் பரீட்சை காலத்தில் மொத்த ECE பசங்களும் இங்க தான் வந்துருவாங்க(40 க்கும் மேல இருக்கும்). அனைவரையும் தன் பிள்ளை போல் கவனிக்கும் குணம் இவரின் சிறப்பு. பொதுவாக நான் ஜாதி, மதம் பார்ப்பதில்லை. இருந்தாலும் உண்மை நிலையை சொல்ல வேண்டுமல்லவா.அவர் உயர் ஜாதி வகுப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் மற்ற மாணவர்களை வேறுபடுத்திப் பார்க்காத மாண்பிற்கு என்றுமே தலை வணங்குகிறேன். இத்தனைக்கும் அன்றைய காலகட்டத்திலே தாசில்தாரக இருந்தவர். எந்த ஒரு பந்தா இல்லாமல் எல்லோரிடமும் மிகவும் எளிமையாக பேசிப் பழகுபவர். நம்மளுடன் பயின்ற ஒவ்வொரு EcE பயலுகளுக்கும் இந்த வீடு தான்வேடந்தாங்கல்.இதை எந்த ஒரு நண்பனும் மறுக்க மாட்டாங்க. ஒவ்வொரு முறையும் திருவில்லி புத்தூர் சென்றால் நான் மறக்காம சந்திக்க நினைக்கும் நல்ல மனிதரில் இவரும் ஒருவர்.
அருமையான நினைவுகள்....
பதிலளிநீக்குவாழ்த்துகள்.....