திங்கள், 21 ஜனவரி, 2019

எனக்கு பிடித்த நண்பன் 1 - பேச்சி முத்து

என்னுடைய பள்ளி நண்பர்களிலேயே மிகவும் முக்கியமானவர்
பேச்சி முத்து. அவருடன் இரண்டே வருடம் தான் படித்திருக்கிறேன். பத்தாம் வகுப்பில் 470க்கு மேல் எடுத்தும் தன்னுடைய குடும்ப பொருளாதார சூழல் காரணமாக மேற்கொண்டு பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் இரண்டு வருடம் வேலை செய்தார். அங்கு அவரின் முதலாளி மதிப்பெண் பற்றி கேள்விப்பட்டு அவரின் குடும்பத்திற்கு சற்று உதவி செய்து அவரை படிக்கச் செய்தார். வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற வெறித்தனமான எண்ணம் கொண்டு படித்தவர். எங்கள் பள்ளியில் +2வில் நல்ல மதிப்பெண் பெற்ற முதல் மூன்று பேரில் இவரும் ஒருவர். நல்ல மதிப்பெண் பெற்று சிறந்த பொறியியல் கல்லூரியில் சேர்ந்து அங்கும் குடும்ப பொருளாதார சூழல் காரணமாக பாதியிலே நிற்க வேண்டிய சூழல். இவர் மட்டும் கல்லூரி முடித்திருந்தால் எங்கயோ சென்றிருப்பார். மீண்டும் சிறிது காலம் வேலை செய்து அந்தப் பணத்தை வைத்து டிச்சர் டிரைனிங் முடித்து இன்று அரசு வாத்தியாராக பணிபுரிகிறார். சரியான வாய்ப்பும் வசதியும் இல்லாத அப்துல் கலாம்கள் நம் நாட்டில் அதிகம். அதில் இவரும் ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது. நான் பார்த்ததிலே மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைந்திருக்கக் கூடிய ஒரு சில நண்பர்களில் இவரும் ஒருவர்.

1 கருத்து: