செவ்வாய், 22 ஜனவரி, 2019

நான் நிச்சல் கற்றுக் கொண்டது

என்னுடைய இளமைப் பருவம் முழுவதும் செங்குளம்எனும் கிராமத்தில் தான் நகர்ந்தது. அந்த கிராமத்தில் தான் நான் நிச்சல் கற்றுக் கொண்டது. எனது தந்தை கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அவருக்கு நீச்சல் தெரியாது. எனது அம்மாவுக்கு ஒரளவு தெரியும். முதல் முறையாக செங்குளத்தில் உள்ள சங்கர் கிணற்றில் எனக்கும், அண்ணனுக்கு, தங்கைக்கு கற்றுத் தர எனது அன்னைஅழைத்துச் சென்றார்கள். உடன் அம்மாவின் அக்கம் பக்கத்து வீட்டு தோழிகளும் வந்திருந்தனர்.புது சோப்பை தண்ணிரில் நனைப்பதற்காக கிணற்றில் குனிந்த போது நான் தவறி உள்ளே விழுந்து விட்டேன். எனது அம்மாவுக்கும்,சுற்றி இருந்த தோழிகளும் அந்த அளவுக்கு நீச்சல் தெரியாது, வேறு ஆட்களும் அங்கு இல்லாததால் எனது அன்னை தனி ஆளாகப் போராடி என்னை உயிருடன் மீட்டெடுத்தார். உண்மையிலே என் தாய் தைரியமானவர் தான். ஒவ்வொருவருக்கும் ஜனனம் என்பது தாயின் மூலம் ஒரு முறைதான் நிகழும். ஆனால் எனக்கு மட்டும் இருமுறை நிகழ்ந்தது என்றால் மிகையாகாது. அன்று முதல் சுமார் இரண்டு வருடம் நீச்சல் கற்றுக் கொள்ளப் பயந்து நடுங்கிய எனக்கு ஒரே நாளில் எனது சித்தப்பா கிருஷ்ணன் அவர்களால் கற்று இன்று இருபதுக்கும் மேல் லெப் நீச்சல் அடிக்கக் கூடிய நிலைக்கு உயர்ந்ததை எண்ணிப் பெருமை அடைகின்றேன். எதைக் கண்டு பயந்து நடுங்கினேனோ அதில் சிறந்து விளங்க உதவிய சித்தப்பா கிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி. நீண்ட நெடிய கிராமத்து வாழ்க்கைக்குப் பிறகு 2007ல் சென்னையில் உள்ள நந்தனம் YMCA நீச்சல் குளத்தில் தான் மறுபடியும் நீச்சல் அடிக்க ஆரம்பித்தேன். அங்கு செல்வம் சார் மூலம் முங்கு நீச்சல் ( தண்ணீருக்கு அடியில்) 30 மீட்டருக்கும் மேலாக செல்லக் கற்றுக் கொண்டேன். நான் வீடு மாறி சைதாப்பேட்டையில் இருந்து பெருங்குடிக்கு வந்த பிறகு வேளச்சேரி Aquatic complex ல் உள்ள நீச்சல்குளம் தான் என்னை நீச்சலில் இன்னும் பன்மடங்கு உயர்த்த உதவியது. கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக நீச்சல் குளத்தில் சென்று தினமும் குளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளேன்.நான் பார்த்ததில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீச்சல் கற்றுக் கொள்ள விரும்புவர்களுக்கு வேளச்சேரி Aquatic complex தான் சிறந்தத் தேர்வு .நல்ல பயிற்சியாளர்கள், மிகவும் சுத்தமான நீச்சல் குளம். இந்திய மற்றும் தமிழக அளவில் நிறைய நீச்சல் போட்டி அங்கு தான் நடக்கும். நானே மூன்று முறை பங்கு பெற்று ஒன்றில் நூலிலையில் மூன்றாவது இடத்தை தவற விட்டுட்டுக்கிறேன். நீங்களும், உங்கள் குழந்தைகளும் நீச்சல் கற்றுக் கொள்ள விரும்பினால் தாராளமாக இங்கு சேர்க்கலாம். தொடர்ந்து அங்கு சென்று நீச்சல் அடிக்கும் பட்சத்தில் நீங்களும், உங்கள் பிள்ளைகளும் தலை சிறந்த நீச்சல் வீரராக உருவெடுப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது. https://goo.gl/maps/DYjZx4KscKL2

1 கருத்து: