செவ்வாய், 22 ஜனவரி, 2019

இளையராஜா ஐயாவின் இசைக்கு நான் ஒரு அடிமை

என்னுடைய இளமை காலம் தொட்டு ஐயாவின் இசைக்கு நான் ஒரு அடிமை. அதுவும் கல்லூரி நாட்களில் தினமும் பஸ்ஸில் பயணிக்கும் போது முக்கால் வாசி நாட்கள் ஐயாவின் பாடல் தான் ஒலிக்கும், அந்தப் பாடலைக் கேட்டு மெய்மறந்த தருணமும் உண்டு. பேருந்தில் பயணிக்கும் போதும், தனிமையில் இருக்கும் போதும் இவரின் பாடல் கேட்கும் போது நம்மை மறந்து பழைய நினைவுகளை மனதில் அசை போடச் செய்வதில் இவருக்கு நிகர் இவரே. தாய் பாசத்தை மையமாக வைத்து இவர் பாடிய பாடலை இன்றும் கேட்டாலும் கண்களில் கண்ணீர் வர வைத்து விடுவார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக