செவ்வாய், 22 ஜனவரி, 2019

எனக்கு பிடித்த தம்பி - சண்முகவேல்

என்னுடைய பள்ளி நண்பர் வேல்முருகனின் தம்பி சண்முகவேல். இவர் Physical handicap பாக இருந்தாலும் படிப்பதிலும், நாணயத்திலும், பண்பிலும் சிறந்தவர்.மிகக் கடின உழைப்பாளி. தன்னுடைய கடின உழைப்பாள் B.E & M.E முடித்து கனரா வங்கியில் சென்னையில் பணிபுரிகிறார்.அவருடைய கிளையில் தான் எனக்கு சேவிங்ஸ் அக்கவுண்ட் உள்ளது. அடிக் கொருக்க வங்கிக்குச் செல்லுவது வழக்கம் அப்போது அவரைப் பற்றி வங்கியின் தலைவர் புகழ்ந்து தள்ளிவிட்டார். அவை அனைத்தும் உண்மையே. வாடிக்கையாளரைக் கையாளும் விதமாகட்டும், உதவி என்று கேட்போருக்கு முகம் சுளிக்காமல் உதவும் பண்பாகட்டும் அற்புதம். இரண்டு கால்களை வைத்துக் கொண்டு கை நீட்டி ஏய்த்துப் பிழைப்பவருக்கு மத்தியில் தம்பி ஒரு மிகச் சிறந்த மகான் என்று சொன்னாலும் மிகையாகாது. உங்கள் பணி மேன் மேலும் சிறக்க இந்த காசி அண்ணனின் வாழ்த்துக்கள்.

1 கருத்து: