செவ்வாய், 22 ஜனவரி, 2019

பாட்டி

இவங்க தான் என்னுடைய பாட்டி. எங்க அம்மாவோட அம்மா. மிகச் சிறந்த கடின உழைப்பாளி. எந்த வேலையாக இருந்தாலும் அசரமல் உழைக்கக் கூடியவர். பேரன் & பேத்தி மேல் அளவில்லா பாசம் கொண்டவர். எனது அப்பா என்னை, அண்ணன் & தங்கச்சியை கல்லூரியில் படிக்க வைக்க பொருளாதார சூழலால் தட்டுத்தடுமாறிய போது தாங்கிப் பிடித்து எங்களைப் படிக்கவைத்தவர். தனக்கென ஒரு ரூபாய் செலவு செய்ய ரொம்ப யோசிப்பவர் .சேமிப்பில் எறும்பு போன்றவர். தனது நான்கு வயதில் அம்மாவைப் பறிகொடுத்து தனது தம்பிக்கு ஒரு தாயாக இருந்து தான் படிக்கா விட்டாலும் தனது தம்பியை பள்ளியில் படிக்க வைத்தவர். அவர் ஆசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றுவிட்டார் . எனது பாட்டியின் தியாகம் அளப்பறியது. ஒரு பெண்ணால் தனது தம்பியையும் பேரன் & பேத்தியையும் படிக்க வைத்து அழகு பார்த்த இவரை விட உலகத்தில் வேற என்ன சாதனையை நிகழ்த்தி விட முடியும்? 

1 கருத்து:

  1. அருமை காசி
    உங்கள் வரிகள் அவர்களின் தியாகத்தை கண் முன்னே வர செய்தது.
    உங்களின் ஆத்மாரத்தமான அன்பும், உண்மையான உறவின் உச்ச கட்ட பாசத்தையும் பத்து வரிகளில் பதிவு செய்தது அருமை...

    பதிலளிநீக்கு