நம்முடைய சிறு வயதில் நம் வீட்டிற்கு உறவினர்கள் வந்து ஊருக்கு கிளம்பும் போது சிறுவர்களின் கையில் ரூபாய் தருவது அப்போது வழக்கமாக இருக்கும். எனக்கு விபரம் தெரிந்த நாளில் எனது தாய் மற்றும் தந்தை சொன்னது இதுதான் யாரும் காசு குடுத்தால் வாங்காதே அவரிடமே திருப்பிக் கொடுத்து விடு என்று. அதையும் தாண்டி ஒரிரு முறை வாங்கி விட்டேன் என்னை என் தந்தை கடிந்து கொண்டார். எனக்கு ரூபாய் கொடுத்த உறவினர் அடுத்த முறை எங்கள் வீட்டிற்கு வரும் போது இது மாதிரியான பழக்கத்தை நிருத்துமாறு கூறினார். வீட்டிலே பணத்திற்குத் தட்டுப்பாடு வந்தபோது கூட அவர் யாரிடமும் பணம் கேட்கவும் மாட்டார். எனது அம்மா சிறுகச் சிறுகச் சேர்த்த பணம் தான் பல நேரத்தில் உதவியிருக்கிறது. இதைப் பார்த்து வளர்ந்ததால் என்னவோ 2004ல் வேலை தேடி நான்சென்னையில் தங்கி வேலை தேடும் போது ஒரு நேர்காணலுக்காக கே.கே நகர் வீட்டில் இருந்து வேளச்சேரி வந்த போது கையில் இருந்த பணத்தை தவறவிட்டுவிட்டேன் மதிய உணவும் சாப்பிடவில்லை, கையில் பணம் இல்லை, யாரிடமும் கேட்க மனமில்லை, அப்பொழுதெல்லாம் என்னிடம் செல்போனும் இல்லை. பிறகு என்ன செய்ய என்று வேளச்சேரியில் இருந்து கே.கே நகருக்கு வெயிலில் நடந்தே தான் சென்றேன். அந்த நடை எனக்கு உணர்த்தியது பணத்தை தவற விடாமல் விளிப்புடன் இருப்பது எப்படி என்பதைத் தாண்டி என் தாய். தந்தையர் கடைப்பிடித்த கொள்கையையும் என்னால் மிர முடியவில்லை. அதை இன்று ஏதார்ச்சியாக நினைத்துப் பார்த்தேன். என் தாய் தந்தையர் எனக்குச் சொல்லிக் காட்டிருந்தால் நான்மறந்திருப்பேன், அவர்கள் வாழ்ந்து காட்டியதால் என் சிறுவயதிலே ஆழ் மனதில் பதிந்து விட்டது.இன்றும்நான் அவர்கள் வழியில் வாழ்ந்து காட்டுகிறேன்.
Man of principles ..
பதிலளிநீக்கு