செவ்வாய், 22 ஜனவரி, 2019

இயற்கையை காக்கும் பறவைகளுக்கு வெயில் காலத்தில் தண்ணீரும், உண்ண உணவும் வைப்போம்

பொதுவாக உங்களுக்குப் பிடித்த பறவை எது என்று கேட்டால் காக்கையை யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் அம்மாவாசை அன்று நம் வீட்டிற்கு வரக்கூடிய காக்கையை நம் முன்னோர்களுடன் ஒப்பிடுபவர்கள் பலர் உண்டு. அந்த ஒரு நாள் காக்கைக்கு மிகப் பெரிய விருந்து தான். பிற நாட்களில் விரட்டப்படும். எங்க ஊருல வடை கடை முதல் கறிக் கடை வரை முதலில் காக்கைக்குப் போட்டுட்டு தான் வரும் வாடிக்கையாளருக்கு கொடுப்பாங்க.காக்காவுக்கு பல சிறப்பு உண்டு. உடல் பலம் பெரிதாக இல்லாவிட்டாலும் தனது குஞ்சுகளுக்கு ஆபத்து என்றால் அது கழுகே வந்தாலும் உடனே போராளியாக மாறி இயற்றவரைதன் குடும்பத்தைக் காக்கும்.காக்கா கூட்டமாக தன்னுடைய இனத்தை அழைத்து உணவு உண்ணும் செயல் அற்புதமான ஒன்று. ஒற்றுமைக்கு ஒரு சிறந்த பறவை காகம் தான்.காக்காவை மனிதன் வெறுக்க முதல் காரணம் அதன் நிறமாகக் கூட இருக்கலாம். வெள்ளையாக இருந்திருந்தால் அது கூண்டில் வளர்க்கப்படும் பறவையாக இருக்கும் இல்லை என்றால் நமது தட்டில் இருந்திருக்கும். சில நல்லவர்கள் இந்த ஊருல இருக்கறதாலத் தான் நம்ம ஊருக்கு இன்னும் மழை பெய்யுது என்ற வாக்கியம் உண்டு.காக்காவைப் போல் ஒரு சில உயிரினங்கள் வாழ்வதால் தான் இயற்கையானது காக்கப்பட்டு மழைப் பொழிகின்றது. ஆகையால் அத்தகைய இயற்கையை காக்கும் பறவைகளுக்கு வெயில் காலத்தில் தண்ணீரும், உண்ண உணவும் வைப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக