சுமார் பதினாறு வருடங்களுக்கு முன்பு நம் கல்லூரியில் ECE 5th Sem ல் friendship day கொண்டாடியதே யாராலும் மறக்க முடியாது. அன்று நம் எல்லோரயும் கதிகலங்க வைத்து விட்டது. நண்பர்களுக்கு ஒரு சர்ப்பிரெஸ் தருவதற்காக யாருக்கும் தெரியாமல் குளிர்பானத்தில் பீர் கலந்து எல்லா மாணவர்களுக்கும் வகுப்பறையில் வைத்தே குடுக்க அது HoD & Principal வரை தெரிய மிகப் பெரிய பிரச்சனையே உண்டு பண்ணி விட்டது. சில நண்பர்களின் யோசனைப்படி நாம் அனைவரும் தெரிந்தே சாப்பிட்டோம் என்றால் சில நண்பர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் என்ற யோசனைப் படி நடக்க . அதற்காக நாங்கள் பெற்ற தண்டனை ஒரு மாத காலம் சஸ்பென்ட் & விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் விடுதியே விட்டு இரவோடு இரவாக வெளியேற்ற ப்பட்டனர். பல கட்ட விசாரணக்குப் பின்பு இரு நண்பர்களை கல்லூரியை விட்டே நீக்கி விட்டனர். யாரேக் காப்பாற்ற தியாகம் செய்தோமோ அது வீண் என்றே சொல்லலாம்.அந்த ஒரு மாத காலம் நமக்கு கற்றுக் தந்தது ஏறாளம். இதற்கு இடையில் மாணவ/மாணவிகள் போராட்டம் வேறு. மயங்கிய மாணவிகள் கலங்கிய மாணவர்கள் .மோந்து பார்த்துக் கண்டு பிடிக்க நீ என்ன மோப்ப நாயா ? இன்னும் பல. எனக்கு அன்றேக்குத் தான் தெரியும் friendship day யே. அது முதல் எனக்கு மாறக்காது. ஒவ்வொரு நண்பர்களின் & அப்பா / அம்மாக்களின் வலியை நமக்கு உணர்த்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக