சென்னைக்கு வந்து சுமார் பதினாங்கு வருடங்கள் முடிவடைந்து பதினெந்தாவது வருடத்தை நோக்கிப் பயணிக்கிறேன். இந்தப் பயணத்தில் இதுவரை ஐந்து வீட்டில் வாடகைக்கு இருந்திருக்கிறேன். அதில் மூன்று வீட்டில் மொத்தமாக சேர்த்து 13 (5+ 5+3)வருடங்களுக்கு மேல் தங்கி இருப்பேன். அந்த மூன்று ஓனருமேஅருமையாவைர்கள். இன்றைய காலத்தில் நாம் தான் வீட்டு உரிமையாளர்களுக்கு பொன் முட்டை இடும் வாத்து. ஆனால் இந்த மூன்று பேருமே வாடகையை அவர்கள் உயர்த்தியதே இல்லை, மனிதனை மதிக்கும் பண்பு, உதவும் குணம், எளிமை, நான் என்ன அட்வான்ஸ் கொடுத்ததேனோ அதை வீட்டைக் காலி பண்ணும் போது அவர் அப்படியே கொடுத்து விட்ட பண்பு, உறவினர் வீட்டில் தங்க, அக்கம் பக்கத்தினரிடம் பேச, அசைவம் சாப்பிட எதிர்ப்புத் தெரிவிக்காத, சாதி, மதம் பார்க்காத,வெள்ளை அடிக்க அது இது என்று பணத்தை கறக்கும் இந்தக் காலத்தில் இப்படி யோரு அருமையான வீட்டு ஓனரை பார்ப்பது அரிது. நானோ அவருடன் பயணித்திற்கிறேன் என்பதை எண்ணி பெருமை கொள்கிறேன். நண்பர்களே இன்றய வீட்டு ஓனர்களாகிய நீங்களும் இத்தகைய பண்பினைப் பின்பற்றி எதிர்வரும் சமுதாயத்திற்கு நாம் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதை என்னுடைய தாழ்மையான விண்ணப்பம் .அந்த ஓனரின் பெயர் சந்திரசேகர் ( பெருங்குடி - ஐந்து வருடம்), அண்ணன் திருப்பதி (மேட்டுப்பாளையம் சைதாப்பேட்டை - ஐந்து வருடம்), தமிழ்மணி (பெருங்குடி - மூன்று வருடம் இன்னும் தொடர்கிறது).
அருமை ...
பதிலளிநீக்கு