இவர் பெயர் G. சொக்கலிங்கம். பங்குச் சந்தை பற்றி 2007ல் என்னுடைய அலுவலக நண்பர்கள் மூலம் அறியப் பெற்று சிறிது தொகையை Mutual Fund ல் இன்வெஸ்ட் பண்ணினேன். எனக்கு அப்போது நாணய விகடன் தவறாமல் படிக்கும் பழக்கம் உண்டு. அப்போதெல்லாம் நாணய விகடன் மாதம் இருமுறை வரும். இப்பொழுது வாரம் ஒருமுறை வருகிறது. இவருடைய கட்டுரை என்றால் நான் தவறாமல் படிக்கும் பழக்கம் எனக்கு. அப்படி ஒரு தெளிவான விளக்கமாக இருக்கும். வேல்யு இன்வெஸ்ட்மெண்ட் அப்படினா என்ன அதனால் நமக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பலன் என்ன என பொருளாதாரம் தெரியாத எங்களைப் போன்றோருக்கு புரிய வைத்த பெருமை இவரையைச் சாரும். இவருடைய ரெக்க மண்டேசன் மற்றும் பங்குச் சந்தை சம்பந்தமான விளக்கம் மிகவும் அற்புதமாக இருக்கும். இவரின் சிறப்பே டிரேடிங் மற்றும் F&O வை விரும்ப மாட்டார்.நான் பார்த்த வரையில் வேல்யு இன்வஸ்மெண்ட் அப்படினா இவர்தான் என்னுடைய பார்வையில் நம்பர் ஒன். நண்பர்களே யாராவது பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைத்தால் இவரையும் இவர் தரும் ரெக்க மண்டேசனையும் கவனிக்கலாம். இல்லையென்றால் ஆண்டுக்கு 5000 ரூபாயில் பங்குச் சந்தை வேலை நாட்களில் தினசரி காலை ஒன்பது மணிக்கு பங்குச் சந்தை தொடர்பான முக்கிய தகவல்களும் ஒரு ரெக்க மண்டேசனயைும் தருவார். அவற்றை எந்த விலையில் வாங்க வேண்டும் & விற்க வேண்டும் என்பது முதல் தெளிவாகத் தருவார்..அவை அனைத்தும் இரண்டு முதல் ஐந்தாண்டு வைத்துக் கொள்வேன் என்பவர்கள் மற்றும் அதில் இணைந்து பயன் பெறவும். டிரெடிங் மற்றும் F&O பண்ண நினைப்பவர்கள் தயவு செய்து இவரே பின் தொடர வேண்டாம். Site -equinomics.in . இதை நான்உங்களுக்கு பரிந்துரைப்பதால் எனக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. என்னுடைய அனுபவத்தைநான் உங்களுடன் பகிர்கிறேன். சமீபத்தில் அவரே சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அப்போது எடுத்த புகைப்படம். என் வாழ்வில் மறக்க முடியா மனிதர்.
அருமையான பதிவு காசி. மிக்க நன்றி ...
பதிலளிநீக்கு