நம்முடைய சிறு வயதில் பள்ளியில் நமக்கு விடக் கூடிய இடைவேளை நேரத்தில்
பள்ளியின் வெளியில் விற்ற இத்தகைய கடைகள் தான் அன்றைய காலத்தில் நமக்கு
சூப்பர் மார்க்கெட்டும், ஷாப்பிங் மால்களும். அப்பொழுதெல்லாம் என்னுடைய
அப்பா /அம்மா ஒன்றாம் வகுப்பில் ஒரு நாளைக்கு பத்து பைசாவில் தொடங்கி
பன்னிரென்டாம் வகுப்பில் ஒரு ரூபாய் தருவார்கள். அவங்க தந்த அந்த காச
வச்சுக்கிட்டு எதை வாங்கலாம்னு யோசித்துக் கொண்டே இத்தகைய கடை முன்னாடி
நின்ன அந்த நாட்கள் அற்புதம் என்று அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
இன்றோ சென்னை போன்ற பெரு நகரத்தில் அரசு பள்ளிகளைத் தவிர்த்து இத்தகைய
கடைகளை காண்பது அரிதாகி விட்டது. இப்ப எல்லாம் பள்ளிகளை இடைவேளை நேரத்தில்
அவர்கள் விருப்பப்படி Snacks தருகிறார்கள். அதற்கும் சேர்த்து பள்ளிகள்
கட்டணத்தை வாங்கி விடுகிறார்கள். நம் குழந்தைகள் Snacks எதை சாப்பிட வேண்டும் என்பதையும் பள்ளிகளே முடிவு செய்யும் நிலைதான் இன்றைய மாணவர்களின் நிலை?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக